சீவிய பென்சிலில் சிங்கார ஓவியம்
பென்சில் சீவிய தோலைச் சேர்த்து வெந்நீரில் போட்டுக் கிண்டினால் அல்லது பால் சேர்த்து இரவெல்லாம் வைத்தால் மறுநாள் காலையில் ரப்பர் (Eraser) கிடைக்கும் என்று செய்து பார்த்திருக்கிறீர்களா?
உங்கள் அப்பா, அம்மாவிடம், அண்ணனிடம், அக்காவிடம் கேட்டுப் பாருங்கள். கண்டிப்பாக செய்திருப்-பார்கள். ஆனால், அப்படியெல்லாம் பென்சில் சீவிய தோலிலிருந்து ரப்பர் வராது.
மயிலிறகைப் புத்தகத்தில் வைத்தால் குட்டிபோடும் என்ற சிறு குழந்தைகளின் கட்டுக்கதை போலத்தான் இதுவும். ஆனால், அப்படிச் சீவிய பென்சில் துகள்-களையும், தோல்களையும் கொண்டு கலைநயத்தோடு ஓவியம் உருவாக்கி-யிருக்கிறார்கள். இது உண்மை.
இதை உருவாக்கியவர் தென்-ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மேஹன் மக்னோச்சி (Mehan Maconochie). பகுதி நேர ஆசிரியர் ஆவார். வெள்ளைத்-தாளில் வெளிக்-கோடுகளைப் (அவுட்லைன்) போடுகிறார்.
பின்னர் பென்சில் சீவி வைத்துள்ள துகள்களை-யிட்டு நிரப்புகிறார். சில இடங்களில் அவை சிற்பமோ என வியக்கும் வகையில் அமைந்துள்ளன. பறவைகள், மீன்கள், இயற்கை மற்றும் புகழ்பெற்ற மனிதர்களின் உருவங்களையும் வடிவமைத்துள்ளார். தான் உருவாக்கிய இந்தக் கலைக்கு பென்சில் ஷேவிங் ஸ்கெட்ச் என்று மேஷன் பெயரிட்டுள்ளார்.