குழந்தைகளுக்குத் தொல்லையா?
மத்திய அரசின் பெண்கள் குழந்தைகள் நல அமைச்சகத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப் படும் சைல்டு லைன் இலவச தொலைபேசி (1098) சேவை நாடு முழுக்க செயல்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலியல் துன்புறுத்தல்கள், ஆதரவற்ற குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் திருமணங்கள் உட்பட குழந்தைகளுக்கு வரக்கூடிய சிக்கல்கள் குறித்து 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித் துறை இப்பணியைச் செய்து-வருகிறது. இது போல நாடு முழுக்க பல்வேறு அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் இப்பணியைச் செய்கின்றன. இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்-கையும், அவர்களின் கொடுமையான வாழ்க்கைக் கதைகளும் நிறைய! எனவே, இனியும் குழந்தை-களுக்-கெதிரான எந்தக் கொடுமையையும் நாம் பொறுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.
தொலை-பேசியோ, அலைபேசியோ எடுங்கள்… எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள பத்து (10) ஒன்பது(9) எட்டு (8)- 1098!
சைல்டு லைன் _ சைல்டு லைன்
பத்து ஒன்பது எட்டு!
கவனிக்க வேணுமே சின்னஞ்சிறு சிட்டு!