உலக நாடுகள்
உலக நாடுகள்
பிரான்ஸ்
FRANCE
தலைநகரம் : பாரீஸ் (Paris)
பரப்பளவு : 640,679 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை : 66.6 மில்லியன் (2014)-_யின் படி
அலுவலக மொழி : பிரெஞ்சு
குடியரசுத் தலைவர் : பிரன்கோஸிஸ் ஹோலண்டே
பிரதமர் : மேனுவல் வால்ஸ்.
அமைவிடம் : மேற்கு அய்ரோப்பாவில் உள்ள நாடு ஆகும். அண்டோரா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளாலும் அட்லாண்டிக் கடல் மற்றும் பிஸ்கே விரிகுடாவாலும் சூழப்பட்டுள்ளது.
சிறப்புச் செய்திகள் : அய்ரோப்பாவில் உள்ள மிகப் பழமையான நாடுகளில் பிரான்ஸ் ஒன்று. 79 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்த சுற்றுலாத் தளமாக பிரான்சு உள்ளது.
உலகில் மிகவும் பிரபலமான சைக்கிள் பந்தயமான ‘டூர் டி பிரான்ஸ்’ இந்நாட்டின் சிறப்பம்சங்களில் முக்கியமானதாகும்.
பிரெஞ்சு உணவுகள்: பர்கண்டி, எக்லேயர், பேஸ்டிஸ், ஃபுளோட்டிங் அய்லண்ட்
புகழ்பெற்ற கட்டடக் கலை: ஈபிள் கோபுரம், நாட்ரே டேம், ஆர்க் டி பிரேம்ப், பாந்தியன், ஒபேரா கார்நியர்
கலை மற்றும் கலாச்சாரம்: கோத்திக் ஆர்ட், ரொமாண்டிசிசம் (ஓவியக் கலை)
சுற்றுலா: பாரிஸ், பிரெஞ்சு ரிவெரா, க்ளெனிங், வெர்நவுன்.