மீண்டும் டைனோசர்கள்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்ற திரைப்பட மேதை எண்ணற்ற அறிவியல் நுட்பம் (சயின்ஸ் ஃபிக்ஷன்) மிகுந்த திரைப் படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் ஒன்று, 1993-ல் வெளிவந்த ‘ஜீராசிக் பார்க்’ (Jurassic park).
இப்படத்தின் மூலம், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த பெரும்பல்லி (டைனோசர்கள்) இனத்தை உலக மக்களுக்கு தெரியப்படுத்தியது. இதனால் உற்சாகம் அடைந்த மக்கள் வசூல் மழையைக் குவித்தனர்.
மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஸ்பீல்பெர்க் 1997–ல் ‘தி லாஸ்ட் வேர்ல்டு’ (The lost world) என்னும் தலைப்பில் வெளியிட்டார். இப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. பிறகு, 2001–ல் மூன்றாம் பாகத்தை வெளியிட்டார். 14
ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜீன் 11–ம் தேதி வெளியானது. இப்படத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், டைனோசர்களின் வகைகளையும் அனைத்து உயிரினங்களின் தன்மையையும் சேர்த்து ஒரு டைனோசரை உருவாக்கினால் எப்படி இருக்கும் என்பதே ஆகும்.
2001 க்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு ‘ஜீராசிக் வேர்ல்டு’ திறக்கப்படுகிறது. இந்நிறுவனம் புதிதாக ‘இண்டோமைனஸ் ரெக்ஸ்’ (I-Rex)
என்ற டைனோசரை உருவாக்கி பொதுமக்கள் முன் காட்ட விரும்புகிறது. இப்படத்தின் நாயகன் ‘கிரிஸ் ப்ராட்’ (Chris Brod) நான்கு ‘வெலாசிராப்டர்’ (Velociraptors) வளர்க்கிறார். இதற்கிடையே கூண்டிலிருந்து ‘I-Rex’ தப்பித்துவிட பார்க்கில் ஏக களேபரம் ஆகிறது.
இதனால், கிரிஸ் ப்ராட் தன் ஆராய்ச்சிக்காக வைத்திருந்த நான்கு வெலாசிராப்டர்களை தயார் செய்து I-Rex- ஐ பிடிக்கச் செய்கிறார். அந்த டைனோசர் பிடிபட்டதா? என்பதுதான் திரில்லிங்கான க்ளைமாக்ஸ். ‘ஜீராசிக் வேர்ல்டு’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
டைனோசர்கள் கீழ்க்கண்ட தன்மைகளில் இருந்திருக்கின்றன:
(i) ஆங்கிலாசோரஸ் (Ankylosaurus). ஆமை தன்மையுடையது.
(ii) அப்பாட்டோசோரஸ் (Apatosaurus). ஒட்டகச்சிவிங்கி தன்மையுடையது.
(iii) ஸ்டெகோசோரஸ் (Stegosaurus). முள்ளம்பன்றி தன்மையுடையது.
(iv) வெலாசிராப்பர் (Velociraptor). சிறுத்தைத் தன்மையுடையது.
(v) டிரானோசோரஸ் ரெக்ஸ் (I-Rex). சிங்கம் தன்மையுடையது. இதுபோன்ற டைனோசர்கள் பல இருந்துள்ளன. அவை மறைந்தாலும் அவற்றின் அதிக்கம் என்றும் மறையாது.