பிரபஞ்ச ரகசியம் 26
கடந்த தொடர்களில் இரவு வானத்தில் பல்வேறு திசைகளில் தெரியும் பல்வேறு விண்மீன் மணடலங்களையும் அதன் விண்மீன்களையும் கண்டுவியந்துள்ளோம். ஆனால் இந்த விண்மீன்கள் அனைத்தும் ஒவ்வோரு பருவகாலத்தில் தோன்றி மறைபவை. இவற்றை நிலநடுக்கோட்டு விண்மீன்மணடலங்கள் என்றும் கூறுவர்.
எடுத்துக்காட்டாக ஓரையான் விண்மீன் மணடலம் குளிகாலத்திலும், ஸ்கார்பியன் என்ற தேள்வடிவ விண்மீன் மணடல்ம் கோடை காலத்திலும், தேனாஃப்(அன்ன வடிவ) விண்மீன் மண்டலம் மழைக்காலத்திலும் நமது கண்களுக்கு அழகிய வடிவில் விருந்தளிக்கும். ஆனால் என்றும் மறையாத விண்மீன் மணடலங்களும் உண்டு.
வட தென் துருவங்களில் சூரியன் என்றுமே மறையாது என்பது நமக்கு தெரிந்ததே, அது போல் தான் துருவப்பகுதியில் தெரியும் விண்மீன்களும் என்றும் மறைவதில்லை, துருவப்பகுதி விண்மீன் மண்டலங்களை மூன்று பிரிவுகளாக பிரித்துத் தந்துள்ளனர்.
1. வடகோள் விண்மீன் மண்டலம் வடதுருவத்தில் தெரியும் விண்மீன்கள்
2. தென்கோள் விண்மீன் மணடலம் தென் துருவத்தில் தெரியும் விண்மீன்கள்
3. துருவச்சுற்று விண்மீன்கள் வடக்கு அல்லது தெற்கே 40 டிகிரி முதல் 60 டிகிரி சாய்மானத்தில் உள்ளவற்றை துருவச்சுற்று விண்மீன் மண்டலம் என்று கூறுவோம்.
நில நடுக்கோட்டில் இருக்கும் நாடுகளான மெக்சிகோ, முதல் பிரேசில் வரையிலான தென் அமெரிக்க நாடுகள், எகிப்து முதல் சூடான் முதல் தென் ஆப்ரிக்க வரையினாலான ஆப்பிரிக்க நாடுகள், ஆசியாவில் இந்தியா, மலேசியா,
சீனா தென்சீன நாடுகளில் +40டிகிரி முதல் +60டிகிரி வரையினாலான சாய்மானத்தில் சில விண்மீன் மண்டலங்கள் காட்சிதரும் இந்த விண்மீன் மண்டலங்களை வட இந்தியா, தமிழக தென் கடற்கரை மாவட்டங்கள் மற்றும் திருவனந்த புரத்தில் இருந்து ஆண்டிற்கு 9 மாதங்கள் வரை அழகாக காட்சி தரும் மிகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் துருவச்சுற்று விண்மீன் மண்டலங்கள் பெருங்கரடி அல்லது உர்சா மேஜர்,
காசியோப்பியா போன்றவை ஆகும்,பெருங்கரடி மற்றும் காசியோப்பியா போன்ற விண்மீன்கள் வட அமெரிக்கா வட அய்ரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இந்த விண்மீன் மண்டலங்கள் என்றும் மறைவதே இல்லை. இந்த விண்மீன் மண்டலங்களை துருவவிண்மீன்கள் என்றும் ஆங்கிலத்தில் போலாரீஸ் என்றும் அழைக்கின்றனர்.
மேலும் சில துருவ விண்மீன் மண்டலங்கள் உர்ஸா மைனஸ்(குறுங்கரடி), செஃபியாஸ், டிராகோ போன்ற விண்மீன் மண்டலங்கள் ஆகும்.
பெருங்கரடி என்ற உர்சா மேஜர் இந்தியாவில் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கும் போது வடக்கு வானில் முழுமையாக் தோற்றமளிக்கும், பார்த்த உடனே அடையாளம் கண்டுகொள்ளும் இந்த விண்மீன் மண்டலத்தை இந்திய மரபியல் படி சப்தரிசிகள் என்று கூறுவர். இதில் தெளிவாகத் தெரியும் 12 விண்மீன்களை இணைத்தால் பெருங்கரடி வடிவம் வரும்.
இந்த விண்மீன்களில் மிகவும் தெளிவாகத் தெரியும் ஆல்பா உர்சா மோஜாரிஸ் என்ற துபே இந்த விண்மீன் 107 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இதனை அடுத்து பீட்டா உர்சா மோஜாரிஸ் என்ற மீரக்,காமா உர்சா மோஜாரிஸ் என்ற ஃபாத்,
டெல்டா உர்சா மோஜாரிஸ் என்ற மகரீஸ், எப்சிலான் உர்சா மோஜாரிஸ் என்ற அலியோத், சீட்டா உர்சா மோஜாரிஸ் என்ற மிசார், ஈட்டா உர்சா மோஜாரிஸ் என்ற அல்கயீத் போன்ற 7 விண்மீன்கள் இந்திய மரபியலில் மிகவும் பிரபலமானவை.
புராணக்கதைகளில் உள்ள ஏமாற்று வேலை:
பெருங்கரடி விண்மீன் மண்டலத்தில் உள்ள சீட்டா உர்சா மோஜாரிஸ் என்ற மிசார் விண்மீனுக்கு மிக அருகில் மிகவும் மங்களான விண்மீன் ஒன்று தெரியும், இதை அல்கோர் என்று அரபி மொழியில் அழைப்பார்கள்,
இந்த ஏழு விண்மீன் கிரது, புலஹ, புலஸ்த்ய, அத்திரி, அக்கிரஸ், வசிட்டர், மரீசி என்பனவாகும். இதில் மீசார் என்ற விண்மீனிற்கு அருகில் மிகவும் மங்கலான அல்கோர் என்ற விண்மீன் உண்டு, இதை அருந்ததி விண்மீன் என்று அழைப்பார்கள். மிசார் மற்றும் அல்கோர் விண்மீகள் இரண்டு இரட்டை விண்மீன்கள் அல்ல.
இரண்டும் பல நூறு ஒளியாண்டு தூரம் உள்ள விண்மீன்கள் ஆகும், ஆனால் பார்வைக்கு அருகருகே தெரிவதால் புரானக்கதைகளில் வசிட்டர் மற்றும் அவரது மனைவி அருந்ததி என்று பொய்க்கதை புணைந்து வைத்தனர்..
மிசார் என்ற விண்மீன் நமது சூரியனை விட 62 மடங்கு வெப்பம் கொண்ட நடுநிலை செம்மை நிற விண்மீனாகும், அதே போல் அல்கோர் என்ற விண்மீன் வெண்மை நிறமுடையது, இது நமது சூரியனை விட 12 மடங்கு பெரிய விண்மீனாகும், நமது சூரியமண்டலத்தில் இருந்து அதிக தூரமுள்ளதனாலும்,
இதன் வெண்மை நிறத்தாலும் இந்த விண்மீன் கண்களுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை, இரவிலேயே சரியாகத் தெரியாத இந்த அருந்ததி விண்மீன் பகலில் எப்படித் தெரியும், ஆனால் திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கவேண்டும் என்று திருமணத்தை நடத்தும் பார்ப்பனர்கள் ஏமாற்றுவார்கள்.
அவர்களிடம் நீங்கள் பகலில் எப்படி விண்மீன் தெரியும் என்று கேட்கவேண்டும்.
வசிட்டர் எனப்படும் மிசார் விண்மீன் பார்ப்பனர்கள் கூறும் புனைக்கதைப் போல் ஒரு விண்மீன் அல்ல, நாம் முன்பு பார்த்த பைனரி விண்மீன் வரிசையில் உள்ள ஒரு இரட்டை விண்மீன் ஆகும், இந்த விண்மீனை சாதாரன் இரட்டைக்குழல் தொலைநோக்கி வழியாகப் பார்த்தால் மங்கலான இரண்டு விண்மீன்கள் தெரியும்,
மிசார் எ, மற்றும் மிசார் பி என்ற இரண்டு விண்மீன்களும் ஒன்றை ஒன்று எதிரிவிசையோடு சுற்றிவருகிறது, நமது சூரியனுக்கும் வியாழன் கோளுக்கும் இடைப்பட்ட தூரம் தான் இந்த இரண்டு விண்மீன்களுக்கும் உள்ளது, ஆகவே இந்த விண்மீன்களின் இடைவெளி மிகவும் அழுத்தம் மிகுந்த்தாகவும், அதீத வெப்பத்துடன் காணப்படும்.
இந்த இரண்டை விண்மீன் இடைவெளி வெப்பத்தால் உருவாகும் தனிமங்கள் பற்றி நாம் கடந்த தொடர்களில் படித்துள்ளோம்.
பொதுவாக அக்காலத்தில் காடுகளில் பயணிப்பவர்களுக்கு வடதிசையைக் காட்டும் விண்மீன் கூட்டங்களாக இதை அடையாளம் கண்டனர். பிற்காலத்தில் நமது முன்னோர்கள் வடதிசை வானில் விண்மீன் மாறி நமக்கு வழிகாட்டுகின்றனர். என்று உலக்ம் முழுவதிலுமுள்ள பலரால் நம்பப்பட்டது.
இதனால் இந்த விண்மீன் மண்டலம் பல மூடநம்பிக்கை கதைகளின் மையமாக விளங்கியது.