விமானப் பொறியாளராக எப்படி தயாராவது?
அய்.அய்.டி.யில் விமானப் பொறியியல் படிக்க எந்த பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்?
– abirajan6@gmail.com
பதில்: என்ன படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அது பற்றி அறிந்து கொண்டு, தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முனைவதற்கு முதல் பாராட்டு. அய்.அய்.டி போன்ற நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதற்கு அடுத்த பாராட்டு.
பொதுவாக பொறியியல் படிப்பதற்கான அடிப்படைப் பாடங்கள் அறிவியலும், கணக்கும். நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் விரும்பியதைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், இவை அனைத்தையும் நீங்கள் படிக்கத் தான் வேண்டும்.
அதையும் தாண்டி, புரிந்து படிப்பது அவசியம், அதிலும் குறிப்பாக விமானத் தொழில்நுட்பம் படிக்க வேண்டுமென்றால், கணக்கிலும் (Maths), இயற்பியலிலும் (Physics) அதிகக் கவனம் செலுத்தலாம். அதன் அடிப்படைத் தத்துவங்களைப் புரிந்து படிக்க வேண்டியது தான் முக்கியம். விமானப் பொறியியலுக்கு இயந்திரவியலும் முக்கியமானது.
அது நமக்கு பள்ளியில் பாடமாக இல்லாவிட்டாலும், நம் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு கற்றுக் கொள்ளலாம். வாழ்த்துகள்!
இன்னும் சுவாரசியமான கேள்விகள் எல்லாம் வந்திருக்கின்றன.
பதில்கள் அடுத்தடுத்த இதழ்களில்! எதிர்பாருங்கள் பிஞ்சுகளே!