உலக நாடுகள் – டென்மார்க்
அமைவிடமும் எல்லையும்
வடக்கு அய்ரோப்பாவின் தென்பகுதியில் ‘Nordic Countries’ எனப்படும் வடதுருவ நாடுகளின் தென்பகுதி நாடு
இது ஸ்வீடனுக்கு தென்மேற்கிலும், நார்வேயின் தென்பகுதியிலும் ஜெர்மனியின் வடக்கு பகுதியிலும் அமைந்துள்ளது.
பால்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களால சுழப்பட்டுள்ளது
டென்மார்க் அரசு என்பது டென்மார்க் மற்றும் தன்னாட்சிப் பெற்ற இரு பகுதிகளின் ஒருங்கிணைந்த அமைப்பாகும். (கிரீன்லாந்து, பாரோதீவுகள்)
இதன் மொத்த பரப்பளவு 42,562 சதுர கிலோ மீட்டர்
இது பரப்பளவு அடிப்படையில் உலகில் 133ஆவது இடத்தை பெறுகிறது.
இயற்கை அமைப்பு காலநிலையும்
ஜூட்லாந்த் தீபகற்பம் மற்றும் 443 தீவுகளைக் கொண்டது.
முக்கிய தீவுகளான ஸீலாண்ட், வடக்கு ஜூட்லாண்ட், ஃபனோன், பாஃர்ன்ஹோம் போன்றவை பால்டிக் கடலில் அமைந்துள்ளன.
முக்கிய தீவுகள் அனைத்தும் பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
உயர்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 31 மீட்டர்.
ஒரு காலத்தில் இந்நாடு முழுவதும் காடுகளால் நிரம்பியிருந்தது. தற்போது அவை விளைநிலங்களாக்கப்பட்டுள்ளன. இந்த விளை நிலப்பகுதிகளை இப்பகுதியில் பாயும் ஆறுகள் வளப்படுத்துகின்றன.
டென்மார்கை போலவே டென்மார்க் முடியாட்சிக்குட்பட்ட மற்ற இரு பகுதிகளும் வளமானவை.
கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவு.
இங்குள்ள காடுகள் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. (அட்லாண்டிக் கலப்புக்காடுகள், பால்டிக் கலப்புக் காடுகள்)
மக்களும் மொழியும்
நாட்டின் மொத்த மக்கள் தொகை 5,432,335 பேர். மக்கள் தொகை அடிப்படையில் இது உலக அளவில் 108வது இடத்தை வகிக்கிறது. மக்கள் நெருக்க அடிப்படையில் இது 78ஆவது நாடாகும். (சதுர கிலோ மீட்டருக்கு 129 பேர் வசிக்கின்றனர்)
மொத்த மக்கள் தொகையில் 90 டேனியர்கள் ஆவார்கள்.
ஸ்காண்டி நேவாவிலிருந்து குடியேறியவர்கள் 8% பேர்.
நாட்டின் தேசிய மொழி டானிஷ். அதுவே டென்மார்க் பிரதேசத்தின் அலுவலக மொழியாகவும் உள்ளது. மேலும் கிரீன்லாந்து பிரதேசத்தில் கிரீன்லான்டிக் மொழியும் பாரோ தீவுகளால் ‘பாரோஸ்’ மொழியும் அலுவலக மொழிகளாக உள்ளன.
நாட்டின் அரசு முறை
டென்மார்க் முடியாட்சி என்பது ஒற்றை ஆட்சி முறையை கொண்டது. நாட்டின் தலைவராக அரசி விளங்குகிறார்.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தால் ஆட்சி நடைபெறுகிறது.
கிரீன்லாந்து, பாரோ தீவுகளுக்கு தனி டொமினியன் அந்தஸ்து உள்ளது. அவை தனி நாடாளுமன்றங்களைக் கொண்டுள்ளன.
டென்மார்க் மாகாணம் 5 மண்டலங்-களாகவும், 98 நகர சபைகளாகவும் கொண்டதாக உள்ளது.
இதன் தலைநகரம் கோப்பென்ஹாகென்
பொருளாதாரமும் தொழில் வளர்ச்சியும்
நாணயம் ‘டானிஷ் கொர்ன’
டென்மார்க் நாடு பொருளாதாரத்தில் ஒரு முழு தன்னிறைவு பெற்ற நாடாகும்.
டென்மார்க் ஏற்றுமதி மூலம் வருவாய் பெறும் உலகின் 10 ஆவது நாடாகும்.
இந்நாட்டில் ஏராளமான எண்ணெய் வளமும் இயற்கை எரிவாயுக்களும் நிறைந்துள்ளன.
காற்றாலை மூலம் மின்சக்தி ஏராளம் தயாரிக்கப்படுகிறது.
வேதிக் தொழிற்சாலைகள், கப்பல்கட்டுதல், உணவுப் பொருள் உற்பத்தி, மருந்துகள் தயாரிப்பு, கட்டுமானப் பணிகள் போன்றவை நாட்டின் முக்கியத் தொழில்களாகும்
டென்மார்க் பற்றிய சிறப்பு தகவல்கள்
உலகில் அய்ஸ்லாந்து நாட்டிற்கு அடுத்த மிக அமைதியான நாடு
பன்றி இறைச்சி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகிக்கும் நாடு.
வருவாய் ஏற்றத்தாழ்வு மிகவும் குறைந்த நாடுகளில் இதுவும் ஒன்று.
மிக அதிகமானத் தொகையை குறைந்த பட்ச வருவாயாக உடைய நாடு.
2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகின் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்குரிய நாடுகளில் ஒன்று.
மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது சுகாதாரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித் தரத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.