பிரபஞ்ச ரகசியம் 27
பொதுவாக நமது பால்வெளி மட்டுமல்ல இதர பால்வெளி மண்டலங்கள் அனைத்திற்கும் மையத்தில் இருக்கும் அதி சக்திவாய்ந்த கருந்துளை ஒன்று உள்ளது. இதன் ஈர்ப்பு விசை வினாடிக்கு வினாடி அதிகரித்து வரும்.
இந்த மையக் கருந்துளையின் ஈர்ப்பால் தான் நமது சூரியன் முதல் பல்வேறு விண்மீன்கள் தனது அச்சிலிருந்து விலகிச்செல்லாமல் சுழன்று கோள்களையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன, இந்தக் கருந்துளை நாம் முன்பு பார்த்த பிளாக்ஹோலிருந்து வேறுபட்டது. இந்த கருந்துளையிலிருந்து மில்லியன் சக்திகொண்ட ஒளிப்பிழம்புகள் (வெப்பக் கதிர்களாக) வெளியேறிக்கொண்டு இருக்கின்றன.
முன்பு நாம் பார்த்த நியூட்ரான்களும் இங்கிருந்து வெளியேறிக்கொண்டு உள்ளன இவை நமது உடலையும் ஊடுறுவிச் சென்று கொண்டிருக்கின்றன, இவற்றை மின்னிடும்-கருமை ஒளிக்கதிர்கள் என்றும், ஆங்கிலத்தில் Black-body radiation என்றும் அழைப்பார்கள்.
இந்தப் பிரபஞ்சம் (பெருவெளி) விரிவடைய விரிவடைய அனைத்துப் பால்வெளி மண்டலங்களும் ஒன்றை ஒன்று விலகிச்சென்றுகொண்டு இருக்கின்றன. எப்படி நாம் சோப்புக் குமிழை ஊதும் போது பல்வேறு சோப்புக் குமிழ்கள் புறப்பட்டு விண்ணில் பறந்து செல்கின்றனவோ அதுபோல் பால்வெளி மண்டலங்களும் விரிந்து பெருவெளியில் பயணித்துக் கொண்டு உள்ளன.
கடற்கரையில் நமது கால்களைத் தொட்டுத்தழுவும் அலைகள் போல இந்தக் கருந்துளையில் இருந்து நமது பால்வெளி மண்டலம் முழுவதும் அவ்வப்போது கதிரியக்கம் வாய்ந்த ஆபத்தான கதிர்கள் வந்து கொண்டு இருக்கின்றன, இந்தக் கதிர்களை நமது சூரியக் குடும்பத்தைச் சுற்றியுள்ள கைபர் பெல்ட் பகுதி தடுத்துவிடுகிறது.
நூறாயிரம் ஒளியாண்டு அகலமான நமது பால்வெளி மண்டலங்களைப் போல் மில்லியன் கணக்கான பால்வெளி மண்டலங்கள் பிரபஞ்ச விண்வெளிக் கடலில் நகர்ந்து கொண்டு வருகின்றன. கற்பனைகூட செய்யமுடியாத ஒளிவெள்ளத்தில் அனைத்து பால்வெளி மண்டலங்களும் மிதந்துகொண்டு இருக்கின்றன.
எப்படி நமது சூரியன் மற்றும் விண்மீன்களை பால்வெளி மண்டலத்தில் உள்ள கருந்துளை ஈர்த்து வைத்திருக்கிறதோ, அதே போல் மிகப்பெரிய கருந்துளை ஒன்று அதீத சக்திவாய்ந்த ஈர்ப்பு விசையுடன் அனைத்தையும் ஈர்த்து வைத்துள்ளது. இந்த கருந்துளை குறித்து 2020 – -ஆம் ஆண்டிற்குள் முழுமையான விவரங்கள் கிடைத்துவிடும்.
1999 ஆம் ஆண்டில் நமது பால்வெளி மண்டலம் ஒருமுறை சுற்றும் கால அளவை மிகச் சரியாக கணக்கிட்டனர். இதை பால்வெளி ஆண்டு என்றும் பெயரிட்டனர். ஒரு பால்வெளியாண்டு என்பது 22.6 கோடி ஆண்டுகளாகும்.
(A Galactic Year = 226 Million Year) அதாவது நமது சூரியன் முன்பு இப்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்த நேரத்தில் பூமியில் டைனோசர்கள் உலவிக்கொண்டு இருந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் சூரியன் பால்வெளி மண்டலத்தை ஒருமுறை சுற்றிவந்துவிட்டது.
சூரியன் தோன்றியதில் இருந்து இன்றுவரை சுமார் 30 சுற்றுக்கள் பால்வெளி மண்டலத்தை சுற்றியிருக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அடுத்த சுற்று சுற்றி சூரியன் இதே இடத்திற்கு வரும் போது ஒன்று மனித இனம் அழிந்திருக்கும் அல்லது அறிவியல் முன்னேற்றம் காரணமாக பூமியை விட்டு வேறு கோள்களில் மனித இனம் குடியேறி இருக்கும்.
சுழலும் வேகம்
2002-ஆம் ஆண்டில் இருந்து நமது பால்வெளி மண்டலத்தை நுண் அலை தொலைநோக்கி (Radio Telescope) வழியாக ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் ஹப்பிள் தொலைநோக்கியைவிட 500 மடங்கு பெரிய அளவில் துல்லியமாக நமது பால்வெளி மண்டலத்தின் பல்வேறு பகுதிகளை கண்டு ஆய்வு செய்யமுடியும்,
முக்கியமாக இந்தப் பால்வெளி மண்டலத்தை நமது சூரியன் வினாடிக்கு 218 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது, இதை ஆங்கிலத்தில் ளிக்ஷீதீவீtணீறீ ஷிஜீமீமீபீ என்று கூறுவார்கள்.
தூரம்
நமது சூரியன் பால்வெளிமண்டலத்தின் மையத்தில் இருந்து 25,000 ஒளியாண்டு தூரம் உள்ளது. அதே நேரத்தில் மைய ஈர்ப்பு விசையின் காரணமாக 486,000 மைல் வேகத்தில் பால்வெளி மண்டலத்தின் மையத்தை நோக்கி நமது சூரியன் பயணித்துக் கொண்டு இருக்கிறது,
நமது சூரியன் மற்றும் இதர விண்மீன்களின் சுற்றுவேகம் மற்றும் ஈர்ப்பு வேகத்தை, தொடர்ந்து கண்காணித்து வந்தபோது மிகவும் வியக்கத்தகுந்த ஒரு தகவல் வெளிப்பட்டது, நமது சூரியன் மற்றும் அனைத்து விண்மீன்களும் ஒரே வேகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கின்றன, எந்த ஒரு காலகட்டத்திலும் நமது சூரியன் வேறு ஒரு விண்மீன் மீது மோதும் வாய்ப்பில்லை.
இதே நடைமுறை தான் அனைத்து விண்மீன் மற்றும் கோள்களில் உள்ளது. அதனால் தான் நமது பூமி அதன் சுற்றுவட்டப்பாதையில் எந்த ஒரு தடையுமின்றி சுற்றிவருகிறது. இதர கோள்களும் சுதந்திரமாக சுற்றிவருகின்றன. எடுத்துக்காட்டாக ஓட்டப்பந்தய மைதானத்தில் ஒவ்வொரு வீரருக்கும் என்று கோடு போட்டு வைத்திருப்பார்கள். அந்தக் கோட்டில் இருந்து வெளியே சென்றால் மற்றொருவருடன் மோத வேண்டிவரும்.
ஆகையால் அந்தக் கோட்டிற்குள்ளேயே ஓடி பதக்கங்களை வெல்வார். இதே நடைமுறை தான் நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வோரு பொருளிலும் உள்ளது.
உயிர்கள் மட்டுமல்ல எந்த ஒரு பொருளுக்கும் அழிவு ஒன்று உண்டு. நமது பால்வெளி மண்டலமும் ஒரு காலத்தில் அழிவைச் சந்திக்கும். நமது பால்வெளி மண்டலத்திற்கு அருகில் உள்ள ஆண்ட்ரோமீடா என்ற பால்வெளி மண்டலத்தின் வெளிப்புர வளையம் நமது பால்வெளி மண்டலத்தின் ஈர்ப்புவிசைக்கு அருகில் நெருங்கிக்கொண்டு உள்ளது.
அதாவது நமது பால்வெளி மண்டலத்தின் ஈர்ப்புவிசைக்குள் அது வந்துவிட்டால் நமது பால்வெளி மண்டலம் வெளிப்புறமும் ஆண்ட்ரோமீடாவின் வெளிப்புறமும் மோதும் சூழல் ஏற்படும் இதன் காரணமாக இரண்டு பால்வெளி மண்டலத்தின் ஈர்ப்புவேகம் சிதைவுற்று இரண்டு பால்வெளி மண்டலமும் ஒன்றில் ஒன்று கலந்துவிடும், அச்சமடைய வேண்டாம் இது நடப்பதற்கும் இன்னும் 300 கோடி ஆண்டுகள் வரையிலும் ஆகலாம், அல்லது அதற்கு அதிகமாக ஆகலாம்.
வயது
நமது பால்வெளிமண்டலத்தின் வயது குறித்து பூமியில் உள்ள அணுக்களின் உதவியுடன் காணலாம். நமது பால்வெளி மண்டலத்தில் ஆரம்பக்கால வெப்பநிலையில் தோரியம் 232 மற்றும் யுரேனியம் 238 அணுக்கள் உருவாகின. இந்த அணுக்களின் மூலம் நமது பால்வெளி மண்டலத்தின் வயதைக் கணிக்கின்றனர். இதன்படி நமது பால்வெளி மண்டலத்தின் வயது 1600 கோடி ஆண்டுகள் என்று துல்லியமாக கணிக்கப்-பட்டுள்ளது.
(தனுசு) சஜிடெரியஸ் Sagittarius விண்மீன் மண்டலம் ஸ்கார்ப்பியன் விண்மீன் மண்டலத்தின் வால் பகுதியில் உள்ளது. கோடை காலத்தில் சஜிடெரியஸ் விண்மீன் மண்டலம் தெளிவாகத் தெரியும். இந்த விண்மீன் மண்டலத்தில் கிழக்கு முனையில் சஜிடெரியஸ் ‘எ’ என்ற இரட்டை விண்மீன்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரட்டை விண்மீன்கள் என்பது பால்வெளி மண்டலத்தின் மையத்திற்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் ஒரு அதிஉயர் கதிரியக்கம் வாய்ந்த விண்மீன் ஆகும். இதை விண்மீன் என்று அடையாளமிட்டு அழைத்தாலும் இது அதிக நிறை கொண்ட கருந்துளை (supermassive black hole) ஆகும்,
சஜிடெரியஸ் ‘எ’ வின் இயக்கத்தை வைத்து பால் வழியின் மையத்தில் அதித நிறை கொண்ட கருந்துளை உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம் உள்ளது அடுத்த தொடரில் சந்திப்போம்.