பிழைகளைத் திருத்துங்கள்…
பிழைகளைத் திருத்துங்கள்…
பிழைகள் யார் செய்தாலும் திருத்தப்பட வேண்டியவை தானே! கருத்துப் பிழைகள் இல்லாமல் செய்திகளைத் தொடர்ந்து தந்தாலும், சில இடங்களில் எழுத்துப் பிழைகள் வந்து விடுகின்றன. விடுதல்கள் நேர்ந்து விடுகின்றன.
இதழ் வெளிவந்துவிட்டது என்பதற்காக பிழைகளை அப்படியே விட்டுவிடக் கூடாதல்லவா? எனவே, அடுத்தடுத்த இதழ்களிலாவது அவற்றைத் திருத்தலாம் என்று நினைக்கிறோம்.
ஆகவே பிஞ்சுகளே, நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழைப் படிக்கும்போது ஏதேனும் பிழைகள் கண்ணில் பட்டால், எந்த பக்கத்தில் என்ன பிழை என்பதை எங்களுக்கு கடிதம் / மின்னஞ்சல் / தொலைப்பேசி வழியாகவும் தெரிவிக்கலாம். அடுத்த இதழில் அவற்றிற்கான திருத்தங்கள் வெளியிடப்படும்.
கடந்த நவம்பர் 2015 இதழில் திருத்தப்பட வேண்டியவை:
பக்கம் 3 – “இவர்கள் எல்லாம் யார் தெரிகிறதா?” என்று நோபல் பரிசு பெற்றவர்களின் படங்கள் இடம்பெறுவதற்குப் பதில், நோபல் பதக்கத்தின் படம் மட்டும் இடம்பெற்றுள்ளது.
பக்கம் 8 – முதல் பத்தி – இரண்டாவது வரி – சுமை என்பதற்கு weight என்பதே சரியான ஆங்கிலச் சொல்.
பக்கம் 13 – இரண்டாவது பத்தி – 15-ஆம் வரி – கறைந்தது என்பது பிழை; கறந்தது என்பதே சரி.
அதே பத்தியில் கீழிருந்து மேல் நான்காம் வரியில், ‘மாலையில் பால் கறக்கிறவர்’ என்று சேர்த்துப் படிக்கவும்.
பக்கம் 26, 27-ஆம் பக்கங்களில் துனிசிய தேசியக் கலந்துரையாடல் அமைப்பின் பெயர் The National Dialogue Quartet என்றே வெளிவந்திருக்க வேண்டும். Quertet என்பதும், Quertet என்பதும் தவறு.
பக்கம் 27 – முதல் பத்தி – 7 ஆம் வரி – Nuclear Fusion
என்பதே சரி.
பக்கம் 28 – முதல் பத்தி – 15ஆம் வரி – ‘நிலவுக்குச் செல்ல வேண்டுமென்பது அவளது கனவு’ என்பதே சரி.
இந்த இதழில் பிழைகள் இருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள்.
ஒவ்வோராண்டின் இறுதியிலும் அவ்வாண்டில் அதிகமான திருத்தங்களைப் பரிந்துரைத்த வருக்கு பரிசு உண்டு.
– பொறுப்பாசிரியர், பெரியார் பிஞ்சு