உலக நாடுகள் -டொமினீக்கன் குடியரசு
அமைவிடமும் எல்லைகளும்:
¨ டொமினீக்கன் குடியரசு வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கரீபியன் கடலின் ஒரு பகுதியான ஹிப்பானியோலா தீவுப் பகுதியில் அமைந்துள்ள நாடு.
¨ அந்த பரப்பில் அமைந்துள்ள நாடுகளில் பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய நாடாகும்.
¨ இதன் எல்லைகளாக மேற்கில் ஹைட்டியும், கிழக்கில் பியூடோரிக்காவும், வட அட்லாண்டின் கடலும், கரீபியன் கடலும் அமைந்துள்ளன.
¨ இதன் மொத்த பரப்பளவு 48,442 சதுர கிலோ மீட்டர்.
¨ இதன் தலைநகர் சாண்டோ டொபிங்கோ
இயற்கை அமைப்பும் காலநிலையும்:
¨ பல்வேறு தீவுகளையும், மணல் திட்டுகளையும் கொண்ட நாடு.
¨ இந்நாட்டிற்கு தென்கிழக்கு திசையிலுள்ள சவோனா மற்றும் தென்மேற்கில் உள்ள பீட்டா ஆகியவை முக்கிய பெரிய தீவுகளாகும்.
¨ டொமினீக்கன் குடியரசு நாட்டின் மத்தியிலும் மேற்கிலும் நான்கு முக்கிய மலைத்தொடர்களைக் கொண்டது. தென்மேற்கே தாழ்நிலங்கள் அமைந்துள்ளது.
¨ நாட்டின் உயர்ந்த சிகரம் பிக்கோட் வார்டி
¨ என்றிகியிலோ ஏரி இந்நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும்.
¨ யாக்டெல்நோடிட் நாட்டின் மிகப்பெரிய நதியாகும்.
¨ இதன் காலநிலை வெப்பமண்டல காலநிலையை அடிப்படையாகக் கொண்டது.
¨ குளிரான மாதங்கள் ஜனவரி, பிப்ரவரி. வெப்பமான காலநிலை ஆகஸ்ட்.
¨ சில நேரங்களில் கடும் புயல் ஏற்படும்.
பொருளாதாரம்:
¨ இது ஒரு பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடு ஆகும்.
¨ இதன் பொருளாதாரம் பெரும்பகுதி கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சார்ந்துள்ளது.
¨ இங்கு கிடைக்கும் முக்கிய இயற்கைத் தாதுப் பெருட்கள்: நிக்கல், பாக்சைட், தங்கம், வெள்ளி
¨ விவசாயத்திலும், கனிமச் சுரங்கங்களிலும் மிக அதிக பேர் வேலை செய்கின்றனர்.
¨ அரிசி, சர்க்கரை மற்றும் தக்காளி உற்பத்திகளில் ஏராளமான குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
¨ நாட்டின் நாணயம் டொனிமிக்கன் பெசா என்று அழைக்கப்படுகிறது.
மக்களும் மொழியும்:
¨ நாட்டின் மக்கள்தொகை 9,760,000
¨ இனக்குழு அடிப்படையில் 16% வெள்ளையரும், 11% கருப்பின மக்களும், 73% கலப்பின மக்களும் வசிக்கின்றனர்.
¨ இவர்களில் 67% ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவர்கள். 18.2% புரட்டஸ்ட் பிரிவைச் சார்ந்தவர்கள். 10.7% மத நம்பிக்கை அற்றவர்கள்.
¨ பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி ஸ்பானிஷ் மொழியாகும். இங்கு பேசப்படும் மொழி ‘டொமினீக்கன் ஸ்பானிஷ்’ என்று அழைக்கப்படுகிறது.
¨ பள்ளிகளில் ஸ்பானிஷ் மொழியின் அடிப்படையே பின்பற்றப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் இரண்டாம் மொழிகளாக கற்பிக்கப்படுகின்றன.
¨ ஹைதியன் மொழி சிறுபான்மை மொழியாகப் பேசப்படுகிறது.
¨ நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 85% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
வரலாற்றுக் குறிப்புகள்:
¨ 1492இல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். இதைத் தொடர்ந்து ஸ்பானியரின் ஆதிக்கம் வந்தது.
¨ 1795இல் பிரான்ஸ் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
¨ 1801இல் கெய்ட்டி நாட்டின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
¨ 1808இல் இந்நாட்டின் ஒரு பகுதியான செண்டோ டொமிக்கோ (தற்போதைய தலைநகர்) தனி குடியரசானது. ஆனால், 1821இல் ஸ்பானியர்கள் மீண்டும் தங்கள் ஆதிக்கத்திற்கு கொண்டுவந்துவிட்டனர்.
¨ 1822 முதல் 1844 வரை ஸ்பானியர் ஆதிக்கத்திலிருந்து மீண்டும் கெய்ட்டி நாட்டின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
¨ 1844இல் பீட்ரோ சந்தானா தலைமையில் டொனினியா தனி நாடானது.
¨ மீண்டும் 1861 முதல் 1865 வரை ஸ்பானியர் ஆதிக்கத்திற்கு வந்தது.
¨ 1865ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று முழுமையாக விடுதலை பெற்று டொமினீக்கன் குடியரசு சுதந்திர அரசாகத் திகழ்ந்தது.
¨ ஆனாலும் அமெரிக்காவின் தலையீடு 1930 வரை அதிகமாக இருந்தது.
அரசு முறை:
¨ இந்நாடு ஒரு மக்களாட்சி குடியரசு நாடாகும். இதன் அதிகாரம் நிர்வாகத்துறை, சட்டத்துறை, நீதித்துறை என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.
¨ குடியரசுத் தலைவர் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்து சட்டத்துறையின் சட்டங்களை செயல்படுத்துவதுடன், கேபினெட் குழுவை நியமிக்கிறார். அவரே முப்படைகளின் தலைவராக இருக்கிறார்.
¨ குடியரசுத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
¨ தற்போதைய குடியரசுத் தலைவர்: டானிலோ மெடினா. துணைக்குடியரசுத் தலைவர்: மார்கரிடா பெர்னான்டஸ்.