காலத்தின் மரணம்
ஸ்விட்சர்லாந்து தயாரிப்பு கைக்கடி-காரங்களையோ, ஜப்பானின் சீக்கோ, சிட்டிசன் கைக்கடி-காரங்களையோ கையில் கட்டிக்கொண்டு படாடோபம் காட்டியவர்களுக்கு பதில் சொல்லும் வகையில், இந்தியாவில் ஏழை-களுக்கு ஏற்ற எள்ளுருண்டையாக 1953ல் தொடங்கப்பட்ட மத்திய அரசு நிறுவனம்தான் ஹெச்.எம்.டி. (Hindustan Machine Tools).
1961ல் சிட்டிசன் கம்பெனியுடன் இணைந்து கைக்-கடிகாரங்களை உற்பத்தி செய்யத் தொடங்கி, 1975 முதல் சொந்தமாகவே தயாரிப்பில் இறங்கியது. 1980களில் இந்தியர்கள் பலரின் மணிக்கட்டுகளில் மணி காட்டிக்கொண்டிருந்தது ஹெச்.எம்.டி. கடிகாரங்கள்தான்.
1990க்குப் பிறகு இந்திய பொருளாதார சூழல் மாறிய நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, உள்நாட்டு டைட்டன் வாட்ச்கள் என சந்தையின் நிலவரம் மாறியது. தனியாருக்கான பெருஞ்சந்தையில் அரசு நிறுவனமான ஹெச்.எம்.டி கவனிப்பாரற்று அனாதையானது. முப்பதாண்டுகளாக புதிதாக யாரையும் வேலையில் சேர்க்கவில்லை. நட்டம் அதிகரித்ததால் நிறுவனத்தை மூடுவது குறித்து 2000 ஆண்டு முதல் ஆலோசிக்கப்பட்டு,
2015ல் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இவ்வாண்டு (2016) ஜனவரி 6 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஹெச்.எம்.டியை மூட முடிவு செய்தது. இந்தியாவின் ஒரு காலம் மரணமடைகிறது.
ஹெச்.எம்.டி. கடிகாரம் கட்டியபடி
அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி