எனக்குப் பிடித்த பெண்
பிஞ்சுகளின் கருத்துகள்
எனக்கு மேரி கியூரியை மிகவும் பிடிக்கும். மேரி கியூரி அம்மையார் போலந்து நாட்டில் 1867ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு அய்ந்து குழந்தைகள். இவரே அவர்களில் இளையவர். கியூரியின் குடும்பத்தில் வறுமை. தமக்கை மருத்துவக் கல்வி கற்க விரும்பினார். ஆனால் பணவசதி இல்லை.
இளையவள் மேரி குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்தார். தாதி போல் பணிவிடைகள் செய்தார். மேரி அதன்மூலம் பொருள் ஈட்டித் தம் தமக்கைக்குக் கல்வி பயில உதவினார். தம்முடைய வறுமையை யாரும் அறியாவண்ணம் கல்லூரி நாள்களைக் கழித்தார். ஒருமுறை மூன்று நாள் உணவு உட்கொள்ளாததனால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
மருத்துவர் நல்ல உணவும் ஓய்வும் தரவேண்டும் என கூறினார். அறிவியல் மேதை பியரி கியூரியை, மேரி திருமணம் செய்து கொண்டார். பியரி கியூரியும் மேரி கியூரியும் இயற்பியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். பியரியும் மேரியும் ஆராய்ச்சி செய்து பொலோனியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தார். அடுத்து ரேடியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தார்.
மேரி கியூரி கண்டுபிடித்த ரேடியத்தை 50 இலட்ச டாலருக்கு வாங்க ஒரு நிறுவனம் முன்வந்தது. ஆனால், தம்முடைய கண்டுபிடிப்பை அறிவியல் உலகத்துக்குக் கொடையாக வழங்கினார் கியூரி. பின், ஆராய்ச்சிகள் பல செய்து ரேடியத்தின் அணு எடையினைக் கண்டுபிடித்தார்.
மேரி கியூரியைப் போல் நானும் நாட்டு மக்களுக்காக ஏதேனும் கண்டுப்பிடிக்க விரும்புகிறேன்.
– ஆர்.எஸ்.ஆதிரா, உண்ணாமலைக்கடை
எனக்குப் பிடித்த பெண் எனது அக்காவை மிக மிகப் பிடிக்கும். அக்கா எனக்கு படிப்பதற்கு உதவி செய்வாள். எனக்கு வீரஜான்சி ராணியை மிகவும் பிடிக்கும். எனது அம்மாவை மிக மிகப் பிடிக்கும். அம்மா எனக்கு படிக்க உதவி செய்வார்கள். அம்மா உடல் தானம் பண்ணினார்கள். என்னையும் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு வானத்தில் சென்று அங்கு இருப்பதைப் பார்க்க ஆசையாக உள்ளது.
– அனுஷியா, உண்ணாமலைக்கடை
அன்னை மணியம்மையார்
எனக்கு அன்னை மணியம்மையாரை மிகவும் பிடிக்கும். 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் வேலூரில் வி.எஸ்.கனகசபை -பத்மாவதி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன், கமலா ஆகியோர் ஆவர்.
அவரிடம் எனக்கு பிடித்தவை:
பெரியார் இயக்கத்தில் அவர் தம்மை அர்ப்பணித்து கொண்ட விதம். சாதாரண பெண்களை போல் இல்லாமல் பெண்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மானமிகு மணியம்மையார் அவர்கள், ஆடம்பரம் இல்லாமல், படாடோபம் இல்லாமல், பட்டு, பகட்டு இல்லாமல், நகை, நட்டு எதுவும் போடாமல், ஆணவம், அகந்தை இல்லாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற முறையில் தொண்டாற்றி என் மனதைக் கவர்ந்தார்.
– வி.யாழ்ஒளி, சென்னை.