2015-ல் நடந்தது என்ன?
2015-ல் நடந்தது என்ன?
ஜூலை 27 என்றால் இனி மாணவர்களுக்கு நினைவுக்கு வரும் ஒரு மிக முக்கியமான வருந்ததக்க நிகழ்வு மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அய்யா அவர்களுடைய இறப்பு தான். இந்தியாவினுடைய அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மக்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர்.
அவருடைய மரணம் இளைஞர்கள், மாணவர்கள் இடையே ஓர் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. ஜூலை 27 அனைவரின் கண்களிலும் கண்ணீர்த் துளிகளைக் கொண்டு வந்த தினம் ஆகும்.
அப்துல்கலாம் புதைக்கப்படவில்லை இளைஞர்கள் மாணவர்கள் மனதில் விதைக்கப்பட்டு உள்ளார்.
– சி.அறிவழகன், தருமபுரி
கடந்த டிசம்பர் 2015 இதழில் அறிவிக்கப்பட்ட ‘2015-ல் நடந்தது என்ன?’ போட்டிக்கு தன்னைப் பாதித்த நிகழ்வை மனதைக் கவரும் வகையில் எழுதிய சி.அறிவழகனுக்கு பரிசு அனுப்பிவைக்கப்படுகிறது.