தாய் மொழியைத் தவிர்க்கலாமா? சமஸ்கிருதத்தைத் தூக்கலாமா?
அண்மையில் என்னுடைய அக்கா வீட்டிற்குச் சென்றபோது, கேந்திரியா வித்யாலயா, திருச்சியில் தன்னுடைய 5ஆம் வகுப்பு முழுஆண்டுத் தேர்வை முடித்துவிட்டு சோகத்துடன் இருந்த என் அக்கா மகள் அபிநயாவிடம், சோகத்திற்கான காரணத்தை வினவினேன்.
ஆறாம் வகுப்பு முதல் பள்ளியில் மூன்றாம் மொழி (விருப்ப மொழி) ஆக தமிழ் அல்லது சமஸ்கிருதம் கற்றத்தர இருப்பதாகவும், தன்னுடைய அம்மாவின் வற்புறுத்தலால் தான் சமஸ்கிருதம் விருப்பமொழியாக தேர்வு செய்துள்ளதாகவும், தன் தோழிகள் அனைவரும் தமிழ்ப் பாடம் தேர்வு செய்துள்ளதால் வகுப்பு மாறவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒரு வழியாக என்னுடைய அக்காவிற்கு அறிவுரை கூறி தமிழ்ப் பாடம் தேர்வு செய்ய ஒப்புதல் வாங்கினேன்.
குழந்தை அபிநயாவிடம், உனக்கு தமிழ் தேர்வு செய்வதில் விருப்பம் இல்லையா என்று கேட்டதற்கு, “என்னுடைய விருப்பத் தேர்வு தமிழ்தான், அம்மாவின் வற்புறுத்தலால் சமஸ்கிருதம் தேர்வு செய்தேன்” என்றார். “அம்மாவை விடு, உனக்கு எது வேண்டும் என்பதை நீயே தேர்ந்தேடு” என்று கூறிவந்தேன்.
மத்திய அரசு எல்லா இடங்களிலும் சமஸ்கிருதத்தைத் திணிக்க மும்முரமாகும் வேளையில் தாய்மொழியைக் காக்க வேண்டியது நம் கடமையல்லவா? அரசு தரும் மயக்க பிஸ்கெட்டுக்கு நம் பிள்ளைகளைப் பலியாக்கலாமா?<