யாரென்று தெரிகிறதா? மே காரொல் ஜெம்சின்
ஆப்பிரிக்க கருப்பினத்தைச் சேர்ந்த பெண் விண்வெளி ஆய்வாளர் மே காரொல் ஜெம்சின். முதல் முதலாக புவியின் சுற்றுவட்டப் பாதைக்குச் சென்ற கருப்பினப் பெண்ணும் இவர்தான், 1956ஆம் ஆண்டு பிறந்த இவர் 12 வயதுவரை மூளைத்திறன் குறைவு பாதிப்பால் பள்ளியில் ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் ஏளனம் செய்யப்பட்டார்.
இந்த ஏளனமே அவரை சாதிக்கவேண்டும் என்ற ஒரு வெறியைத் தூண்டியது, தன்னுடைய பள்ளிக் கல்வியை முடித்தவுடன் அமெரிக்க அமைதி அறிவியல் கழகம் என்ற அமைப்பில் இணைந்து விண்வெளி பற்றிய பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். இவரது திறமையைக் கண்ட அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகம் நாசா 1985ஆம் ஆண்டு தன்னுடைய ஆய்வுக்குழுவில் இணைத்துக் கொண்டது.
கோள்களின் சுற்றுவட்டப் பாதைகள் குறித்து இவர் தொடர்ந்து ஆய்வு செய்து 9 முனைவர் பட்டம் பெற்றார். 1992ஆம் ஆண்டு எண்டோவர் விண்வெளி ஓடத்தில் பயணித்து புவியின் சுற்று வட்டப்பாதையில் சுமார் 4 மாதம் தங்கி ஆய்வு செய்தார். இவர் சிறந்த நடனக் கலைஞரும்கூட. இவரது நடன மேடைகளில் பெரும்பாலும் தன்னுடைய குழந்தைப் பருவ அனுபவங்களை நடனத்தில் நளினமாகக் காட்டுவார். அமெரிக்கா மற்றும் கனடாவில் பல்வேறு மேடைகளில் இவர் நடனமாடியுள்ளார்.
டிஸ்கவரி மற்றும் நேசனல் ஜியோகிராபின் தொலைகாட்சிகளில் வானியல் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் இவர். ‘ஸ்டார் டிரக்’ என்ற விண்வெளி பொழுதுபோக்கு தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர், அங்கும் தன்னுடைய முத்திரையைப் பதித்தார். நாசாவில் இருந்து ஓய்வுபெற்ற இவர் புதிய தலைமுறை விண்வெளிப் பயணத்திற்கான ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். <