உலோக டைனோசர்கள்
நாம் பார்க்கும் பல பொருட்கள், நமக்கு வேறு ஏதேனும் ஒன்றை நினைவுபடுத்தும். பெரிய கண்ணாடியோடு வரும் லாரியைப் பார்த்தால், மீசை வைத்த பெரிய முகம் வருவது போல் தோன்றும். மேகக் கூட்டங்கள் ஏதேனும் விலங்குகளை நினைவுபடுத்தும்.
இங்கே நாம் பார்க்கும் ஓவியங்கள் சிறு பிள்ளைகளின் கற்பனையல்ல… தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மினிமலிச ஓவியரும் அறிவியல் குறுங்கதை எழுத்தாளருமான சந்தோஷ் நாராயணனின் கற்பனை. அவரே சொல்கிறார் கேளுங்கள்: “நைஜீரியா எண்ணெய் தொழிற்-சாலையில் வேலை செய்யும் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
உலகமெங்கும் கடலின் நடுவில் செயல்படும் இந்த எண்ணெய் தொழிற்சாலைகளின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, மாபெரும் உலோக டைனோசர்கள் கடல் நடுவில் நிற்பதுபோல் தோன்றியது. கடலுக்கு சம்பந்தமில்லாத ஏதோ அன்னிய மிருகங்கள். அதை அப்படியே ஒரு மிக்ஸ்ட் மீடியா ஆர்ட்டாக ட்ரை பண்ணினேன்.”
நல்லா இருக்கா இந்தப் படங்கள்? சரி, அப்புறமென்ன, மிக்ஸ்ட் மீடியா ஆர்ட்டாமே, நம்ம பிஞ்சுகளும் களத்தில் இறங்கலாமே! வரைந்த படம், வரைந்தவரின் படத்துடன் எங்களுக்கும் அனுப்பலாமே!