பிரபஞ்ச ரகசியம் 38
வளிமண்டலம் என்பது நமது கோள்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை என்று முன்பு பார்த்தோம், நமது சூரியக் குடும்பத்திற்கும் ஒரு வளிமண்டலம் உண்டு, எப்படி நமது வளிமண்டலம் ஆபத்தான சூரியமின் காந்த அலைகளை தடுத்து நம்மைப் பாதுகாக்கிறதோ அதேபோல் நமது சூரியக் குடும்பத்தைச் சுற்றியுள்ள வளிமண்டலம் மிகவும் ஆபத்தான பெருவெளிக்கதிர்களில் இருந்து நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களை பாதுகாக்கிறது,
இவ்வளிமண்டலத்தை ஆங்கிலத்தில் Extra-Terrestrial Atmosphere,- அதாவது சூரியக் குடும்பத்தில் வெளி வளியடுக்கு மண்டலம் என்று கூறுவார்கள்.
இந்த வெளியடுக்கு மண்டலம் தானாக உருவாகிவிடவில்லை, எட்டு கோள்கள் மற்றும் சில துணைக்கோள்கள் அடங்கிய பகுதி மட்டும் அல்ல நமது சூரியக் குடும்பம். நமது சூரியக் குடும்பம் (Solar System) என்பது சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து விண்பொருட்களை உள்ளடக்கிய ஒரு பகுதி ஆகும்.
இப்பகுதியில் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162க்கும் மேற்பட்ட துணைக்கோள்களையும், ஆயிரக்-கணக்கான குறுங்கோள்களையும், அக்குறுங்கோள்-களின் துணைக்கோள்களையும் மற்றும் பிற வான்பொருட்களையும் உள்ளடக்கியது. வால்-நட்சத்திரம், எரிகற்கள், விண்கற்கள் மற்றும் விண்துகள்கள் போன்றவையும் நமது சூரியக் குடும்பத்தில் காணப்படுகின்றன.
சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரும் வெப்ப முகிலொன்று நுண்ணிய கூறுகளாக கடுமையான அழுத்தத்தால் ஒன்றிணைந்த போது அவற்றுக்குள் ஓர் ஈர்ப்பு விசை உருவாகியது. ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு பல விண்ணுலகக் காட்சிப் பொருள்கள் தோன்றின. இந்த ஈர்ப்பு விசையின் உதவியால்தான் முதலில் நமது சூரியன் தோன்றியது. அதன் பிறகு மீதமுள்ள முகில் தூசுகள் ஈர்ப்புவிசையில் கட்டுப்பட்டு ஒன்று கூடி தாங்களாகவே கோள்களாக மாறின.
இதில் எடை அதிகம் கொண்ட கோள்கள் திடமாக இல்லாமல் வாயுக்கோளமாக மாறின, இவை சூரியனை விட்டு நீண்ட தூரம் இருந்து கொண்டு சூரியனைச் சுற்றிவருகின்றன. அவையே வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை-யாகும். இக்கோள்களில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் இவற்றை வளிமப் பெருங்கோள்கள் எனவும் அழைப்பதுண்டு. அவற்றிலும் முக்கியமாக மிகப்-பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை 99 விழுக்காடு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்றவற்றால் ஆக்கப்பட்டுள்ளது.
மற்றைய புறக்கோள்களான யுரேனஸ், நெப்டியூன் போன்றவை மீத்தேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட கரியவேதிப் பொருட்களால் ஆக்கப்பட்டவை. பொதுவாக சூரியனைச் சுற்றியுள்ள வான்பொருட்கள், முக்கியமாகக் கோள்கள், அனைத்தும் தனித்தனி நீள்வட்ட வடிவமான பாதைகளிலேயே (Orbital Path) சூரியனைச் சுற்றிவருகின்றன.
சூரியனின் அருகில் உள்ள தூசுகள் பல்வேறு வேதி மாற்றங்கள் ஏற்பட்டு திடக்கோள்களாக உருவாகியின, சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் உட்சுற்றுவட்டப்பாதை கோள்கள் என்பவை திடக்கோள்களாகும், அவையாவன: புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் போன்றவை-யாகும். ஆங்கிலத்தில் இதை டெரஸ்டிரியல் பிளானட்ஸ் (Terrestrial Planets) என அழைப்பார்கள். இந்த திடக்கோள்களில் தனிமங்கள் அடங்கிய பாறைகள் மற்றும் உலோகங்கள் அதிகம் உள்ளன.
சூரியக் குடும்பத்தில், சாதாரண விண்கற்கள் கூட முக்கிய இடம்பெறுகின்றன. இந்த விண்கற்கள் மிகவும் அதிகமாக இருக்கும் பகுதி சிறுகோள் பட்டை என்று அழைக்கப்படுகிறது. இப்பட்டை செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே அமைந்துள்ளது.
இப்பட்டையில் உள்ள சிறுகோள்கள் அகக்கோள்களின் பண்பையே கொண்டிருக்கின்றன; அதாவது இப்பட்டையில் உள்ள சிறுகோள்கள் _ உலோகங்கள் மற்றும் கனிமங்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மிகவும் நீண்ட தொலைவில் மற்றொரு சிறு கோள் பட்டை உள்ளது, இதுதான் கைப்பர் பட்டை ஆகும்.
இது நெப்டியூனின் வட்டப்பாதையில் அமைந்துள்ளது. பெரும்பாலும் அது பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
அப்பனிக்கட்டிகளில் நீர், அம்மோனியா மற்றும் மீத்தேன் போன்றவை அடங்கியுள்ளன. இப்பகுதியில் உள்ள கோள்கள் செரஸ், புளூட்டோ, அவுமியா, மேக்மேக் மற்றும் ஏரிஸ் போன்றவையாகும். 1930 முதல் 2006ஆம் ஆண்டு வரை புளூட்டோ ஒரு கோளாகக் கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் அனைத்துலக வானியல் ஒன்றியம் (IAU) 2006இல் ஒரு கோள் என்பது யாது என ஒரு வரையறையை முறைப்படி அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் சூரியனைச் சுற்றி எட்டுக் கோள்கள்தான் உள்ளன என்றும், ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்ட புளூட்டோவானது ஒரு கோள் அல்லவென்றும் கைப்பர் பட்டையில் உள்ள ஒரு பெரும் பொருள் என்றும் அறிவித்தது. தற்பொழுது புளூட்டோ ஒரு குறுங்கோள் என்று குறிக்கப்பெறுகின்றது.
தற்போது கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில், ‘ஊர்ட் மேகம்’ நெடுங்காலமாக தோன்றிவரும் வால்விண்மீன்கள் தோன்றும் இடமாகும்.
சூரியக் குடும்பத்தில் பல்வேறு சிறு பருப்பொருள்கள் அதாவது, வால்விண்மீன்கள், இதர விண்கற்கள் போன்றவை, கோள்களின் ஊடாக தடையின்றி பயணித்துக் கொண்டிருக்கின்றன. அப்படிப் பயணிக்கும்போது சூரியனுக்கு அருகில் வரும் வால்விண்மீன்கள் அதிக வெப்பம் அடைந்து உருகி நீராவி மற்றும் தூசுகள் அடங்கிய வால் போன்ற பகுதி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு நீளும். இதையே நாம் வால்நட்சத்திரம் என்று அழைக்கிறோம்.
சில சிறிய கோள்கள் பெருங்கோள்களின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பெருங்கோளின் அங்கமாக செயல்பட்டு வருகின்றன, பூமிக்கு ஒரு நிலவு போல் செவ்வாய்க்கும் இரண்டிற்கும் மேற்பட்ட நிலவுகள் உள்ளன, வியாழன் மற்றும் சனிகோள்களுக்கு 100க்கும் மேற்பட்ட நிலவுகள் உள்ளன, ஒரு சில குறிப்பிடத்தக்க நாள்களையும் செய்திகளையும் தவிர, பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் சூரியக் குடும்பம் இருந்ததை அறிந்து கொள்ளவில்லை.
புவி அசைவற்றது எனவும் பிரபஞ்சத்தின் நடுவில் இருப்பது எனவும் அவர்கள் நம்பினர். கண்ணுக்குப் புலன் ஆகாத மாயசக்தி இருக்கிறது என்று நம்பினார்கள். கிரேக்க தத்துவ அறிஞரான அரிஸ்டாட்டில் சில கொள்கைகள் மூலம் நமது பெருவெளியை வரையறை செய்தார்.
நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் என்பவர்தான் சூரியக் குடும்பத்தில் சூரியனே மய்யம் என கணித பூர்வமாக அறிவித்தார். பதினேழாம் நூற்றாண்டில் அவருக்குப்பின் வந்தவர்களான கலீலியோ கலிலி, யோகான்னஸ் கெப்லர் மற்றும் அய்சக் நியூட்டன் மூவரும் இயற்பியல் என்பது மாயசக்தி என்பதை புறந்தள்ளி, இயற்பியல் விதிகளை மையமாக வைத்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதன் விளைவாக ‘பூமிதான் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது. பூமியை ஆளும் இயற்பியல் விதிகளே கோள்களுக்கும் பொருந்தும் என்று உறுதிப்படுத்தினர்.’ அண்மைக்காலமாகப் பயன்படும் தொலைநோக்குக் கண்ணாடி மற்றும் ஆளில்லா விண்கலம் இவைகள் புவியியல் ரீதியான அரிய செய்திகளை ஆய்ந்து அறிய வைத்தன.
எல்லா கோள்களும், அவை சார்ந்த பிறபொருள்களும் சூரியனின் சுழற்சிக்கு ஏற்ப அமைந்துள்ள நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. ஹேலி வால்விண்மீன் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றது.
நமது சூரியக் குடும்பத்தில் இத்தனை உறுப்பினர்கள் உள்ளனர். நமது பூமிக்கு எப்படி சூரிய காந்தக் கதிர் மற்றும் விண்கற்களால் ஆபத்து உள்ளதோ அதேபோல் நமது சூரியக் குடும்பத்திற்கும் பெருவெளியில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான கதிரியக்க சக்திகளால் ஆபத்து உண்டு, எடுத்துக்-காட்டாக சூப்பர் நோவா என்னும் பெருவெடிப்பு வெடித்த உடன் அதிலிருந்து வெளிப்படும் பிளாஸ்மா பீம் எனப்படும் அதி உயர் வெப்ப அலைகளால் நமது சூரியக் குடும்பம் முழுவதுமே வினாடிகளில் அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது,
நல்வாய்ப்பாக சூரியக்குடும்பம் இருக்கும் ஸியோடிக் பகுதியில் அப்படி ஒரு சூப்பர் நோவா வெடிக்கும் நிலை இன்னும் உருவாகவில்லை, இருப்பினும் மிக நீண்ட தொலைவில் வெடித்துச் சிதறிய சூப்பர் நோவா வெப்ப அலைகள் நீண்ட தூரம் பயணித்துக் கொண்டு இருக்கின்றன, தூரம் அதிகரிக்கும்போது அதன் வெப்ப அலைகளின் பலம் குறைந்து விடும் இதுபோன்ற பல ஆபத்துகள் நமது சூரியக் குடும்பத்தை தாக்காமல் இருக்க வெளிவளிமண்டலம் என்னும் பாதுகாப்பு வளையம் உள்ளது, இதை குய்பெர் என்று அழைப்பார்கள் இந்தப் பாதுகாப்பு வளையம் அனைத்தும் உறை நிலையில் பனிக்கட்டியாக உள்ளது.
இப்பனிக்-கட்டிகளில் நீர், மீத்தேன், அம்மோனியா, ஹைடிரஜன் சல்பைட் மற்றும் கரியமிலவாயு யாவும் உள்ளன. இத்தனிமங்களின் உருகுநிலை பலநூறு செல்சியஸ்களாக உள்ளன. அதன் படிப்படியான அழுத்தம் காரணமாக இப்பாதுகாப்பு வளையம் இரும்புப் பாறைகளைவிட மிகவும் உறுதியான நிலையில் நமது சூரியக் குடும்பத்தைச் சுற்றி பாதுகாப்புச் சுவராக உள்ளது.
சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்திலிருந்து வரும் ஆபத்தான கதிர்களை சிதறடித்து அவற்றை வலுவிழக்கச் செய்து விடுகிறது.
இதையும் மீறி சூரியக் குடும்பத்திற்குள் நுழையும் ஆபத்தான கதிர்களை வாயுக்கோள்களான நெப்டியூன், சனி, வியாழன் போன்றவை ஈர்த்து அவை மேலும் முன்னேறா-வண்ணம் செய்து விடுகின்றன, இவற்றை தாண்டி வரும் மின்காந்த அலைகளால் நமது பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை.