இது உங்கள் பக்கம்
இது உங்கள் பக்கம்
உங்களுக்கு விருப்பமானது, விருப்பமில்லாதது, நீங்கள் வெறுப்பது, ரசிப்பது… எது குறித்தும் இங்கு எழுதலாம். அது சரியா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பக்கமாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
“இது உங்கள் பக்கம்” என்று தலைப்பிட்டு உங்கள் உணர்வுகளை எழுதி அனுப்புங்கள்.
எனக்கு பிடித்த செல்போன் விளையாட்டுகள்
என் பெயர் தமிழ்த்தென்றல். நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு செல்போன் விளையாட்டுகள் (Mobile Phone Games) மிகவும் பிடிக்கும். அதைப்பற்றி சில வரிகள் உங்களுக்காக:
முதலில்… சப்வெ சர்ஃபர்ஸ் (Subway Surfers):
இந்த விளையாட்டு என்னவென்றால், ஒரு சிறுவன் ரயில் பெட்டியில் வண்ணம் பூசிகொண்டிருப்பான். அது தவறு அல்லவா? அப்போது ஒரு போலிஸ் தன்னுடைய நாயுடன் வந்துகொண்டிருப்பார். அதை அவர் பார்த்தவுடன் அந்தச் சிறுவனைப் பிடிக்க முயற்சிப்பார். ஆனால், அந்தச் சிறுவன் மிக விரைவாக ஓடித் தப்ப முயற்சிப்பான். ஆனால், அந்தச் சிறுவனுக்கு நிறைய தடைகள் உள்ளது. அதைத் தகர்த்து அவன் அந்த போலிசைத் தடுப்பானா? நாம் தான் அந்தச் சிறுவனாக ஓட வேண்டும்.
இரண்டாவது… டாக்கிங் டாம் (Talking Tom):
இது ஒரு வேடிக்கையான விளையாட்டு. இதில் ஒரு கருப்புப் பூனை இருக்கும். நீங்கள் என்ன பேசினாலும் அது தன்னுடைய வேடிக்கையான குரலில் திரும்பத் திரும்பக் கூறும். இந்தப் பூனையை நீங்கள் வாங்கிய ஆடைகளை வைத்தும் அலங்கரிக்கலாம்.
ஆனால், உங்ககிட்ட பணம் இருந்தால்தான் முடியும். இந்த டாமின் (பூனையின்) வாலை இழுத்துப் பாருங்கள். அதனுடைய வயிறு, முகம், கால் போன்றவற்றையும் இழுங்கள். கூச்சப்படும்; சுகமாகத் தூங்கும்; சேட்டை செய்யும். மிகவும் நன்றாக இருக்கும். இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்.
– தமிழ்த்தென்றல், சென்னை
சிந்திக்கத் தொடங்கிவிட்டான் நண்பன்
குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு சென்றுவந்த பின், என் நண்பன் கோகுலைச் சந்தித்தேன். எனக்கும் அவனுக்கும் ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அது கடவுள் இருக்கா? இல்லையா? என்பதுதான். முதலில் நான் “பூமி எப்படி தோன்றியது?” என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் “இயற்கையாக தோன்றியது” என்றான்.
நான் மீண்டும் “மனிதன் எப்படி தோன்றினான்?” என்று கேட்டேன். அதற்கு அவன் “கடவுள் படைத்தார்” என்று சொன்னான். “சரி கடவுளை யார் படைத்தார்?” என்று கேட்டேன். அதற்கு அவன் “இயற்கையாக தோன்றினார்” என்று சொன்னான். சரி கடவுள் “இயற்கையாக தோன்றினார் என்றால், மனிதன் இயற்கையாக தோன்றி இருக்கக் கூடாதா?” என்று கேட்டேன்.
கடைசியாக கடவுள் இல்லையென அவன் ஒப்புக்-கொண்டான். தற்போது அவனுடைய வீட்டில்கூட அவன் கடவுளை கும்பிடுவதில்லை. அவனுடைய அப்பா, அம்மா வற்புறுத்தினாலும் கடவுளை கும்பிடுவதில்லை. கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டான். சிந்திக்கத் தொடங்கிவிட்டான்.
– வி.எம்.வேலவன், பூவிருந்தவல்லி