தகவல் சொல்லிட்டுப் போங்க!
வணக்கம் பிஞ்சுகளே,
நல்லா இருக்கீங்களா! நா உங்களுக்கு ஒரு தகவல் சொல்றேன். இது ஆசிரியர் தாத்தா ‘வாழ்வியல் சிந்தனை’யில் எழுதி இருக்காங்க! எனக்கு நடந்ததும்கூட. ஆனா நாமதான் யாரும் கடைப்பிடிக்கிறது இல்ல! நாம யார் வீட்டுக்காச்சும் போகணும்னா முதல்ல அவங்களுக்கு தகவல் சொல்லி அவங்க வீட்டில இருக்காங்களா, ஏதாச்சும் முக்கிய பணி இருக்கானு கேட்டுட்டுத்தான் போகணும்.
இது நண்பர்கள், உறவினர் வீடு யார் வீடா இருந்தாலும் சரியா-? நாம அவங்களுக்கு இன்ப அதிர்ச்சி (Surprise) தரணும்னு நினச்சி சொல்லாம போயி, அவங்கள சங்கடப்படுத்தக் கூடாது.
அந்தக் காலத்துல கடிதப் போக்குவரத்து மட்டும்தான். ஆனா இப்ப கைப்பேசி, அய்பேட், வாட்ஸ் அப்னு நிறைய இருக்கு. நாம போற நேரம் அவங்க ஏதாவது பிளான் பண்ணியிருப்-பாங்க. அவசரப் பணியா இருக்கும். நம்மகிட்ட சரியாக பேச முடியாது. நாமும் அவ்ளோ கஷ்டப்பட்டு ஆர்வத்தோட போயி, மனக்கஷ்டத்திற்கு உள்ளாவோம்!
அந்தக் காலத்துல தாத்தா, பாட்டினு வீட்ல யாராச்சும் இருப்பாங்க. இப்ப காலம் போற வேகத்துல அவசர உலகத்துல இருக்கோம்.
யாரையும் நாம குறை சொல்ல முடியாது. குறை சொல்லவும் கூடாது. அதனால நீங்க இனிமே யார் வீட்டுக்காச்சும் போனா தகவல் சொல்லிட்டுப் போங்க. அம்மா, அப்பாகூட போனாலும், ‘தகவல் சொல்லீட்டீங்களா’ன்னு அவங்களையும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க! சரியா?
– தென்றல்