பிரபஞ்ச ரகசியம் 39
இப்பூமியில் உயிரினம் வாழ உயிராதாரம் சூரியன் தான். இது நம் அனைவருக்கும் தெரியும், சூரியனிலிருந்து வரும் வெப்பத்தால் தான் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்கின்றன. இதனால் நமக்கு உணவும் அதிலிருந்து அனைத்து வகையான சத்துகளும் கிடைக்கின்றன, இதே சூரியனின் வெப்பம் நீரை ஆவியாக்கி மேகமாக மாற்றி மழையாகப் பொழிய வைக்கிறது, இந்த வெப்ப ஒளி. சூரியனிலிருந்து நம்மை வந்தடைய எட்டு நிமிடங்கள் ஆகின்றன.
ஆனால் இந்த ஒளி அதாவது போட்டான்கள் சூரியனின் மய்யத்திலிருந்து சூரியனின் மேற்புறத்தை அடைய 12 லட்சம் ஆண்டுகளாகிறது. இந்த நீண்ட தூரப்பயணம் ஏன்? ஒளித்துகளான போட்டான்கள் சூரியனின் மய்யக்கருவில் இருந்து புறப்பட்டு வரும் போது ஏற்படும் தடைகள் குறித்து நாம் ஒளியின் பயணத்தில் பார்க்கப் போகிறோம். அறிவியல் ஆய்வாளர்கள் சூரியனை,
1. உள்ளகம் எனப்படும் மய்யக்கரு. அதனை அடுத்த பகுதியான 2. அதிஉயர் கதிர்வீச்சுப் பகுதி, அதன் அருகிலேயே 3. வெப்பச் சலனப் பகுதி (நீஷீஸீஸ்மீநீtவீஸ்மீ க்ஷ்ஷீஸீமீ) அதனைத் தொடர்ந்து 4. ஒளி மண்டலம், 5. நிறமண்டலம், 6. ஒளி வளையம், 7. சூரியப் புள்ளி, 8. சூரியத் துகள்கள், மற்றும்
9. சூரிய அலைகள் என 9 முக்கியப் பிரிவுகளாகவும், இந்த 9 பிரிவுகளை எளிமையாக விளக்க பல உட்பிரிவுகளாகவும் பிரித்துள்ளனர்.
இதில் முதல் பிரிவு கோர் எனப்படும் மய்யப்பகுதி. நமது பூமியைப் போல் 200 மடங்கு பெரிய அளவு கொண்டது. கோர் எனப்படும் இந்த மய்யக்கரு. இப்பகுதியின் மய்யப்புள்ளியில் தான் ஹைட்ரஜன் அணுக்கள் பிளவுபட்டு ஹீலியமாக மாறுகின்றன. இதை சூரியனின் ஆற்றல் உற்பத்தித் தொழிற்சாலை என்றே கூறலாம்.
இப்படி நடைபெறுவதற்கு குறைந்தபட்சம்
1 லட்சம் பாரன்ஹீட் வெப்பம் தேவைப்படுகிறது, ஹைட்ரஜன் அணுக்கள் பிளவுபடும் போது மிகவும் அபாயகரமான பிளாஸ்மா வெளிப்படுகிறது, இது போட்டான்களின் ஆரம்ப நிலையாகும். இந்த பிளாஸ்மாக்கள் அப்படியே நமது பூமியை அடைந்தால் பூமி ஜல்லடை போல் துளைக்கப்பட்டு விடும், ஆனால் இந்த பிளாஸ்மாக்கள் கோர் எனப்படும் மய்யப்பகுதியை விட்டு வெளியே வர பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் கடக்கவேண்டும், சாதாரணமாக இருந்தால் இந்த தூரத்தை வினாடியில் நூறில் இரண்டு பங்கு நேரத்தில் கடந்துவிடலாம்.
ஆனால், மய்யக்கருவில் ஏற்படும் அணுப்பிளவின் காரணமாக நேர் எதிர் எலக்ட்ரான்கள் ஒன்றை ஒன்று நெருக்கி விலக்கிக்கொண்டு இருக்கும். இப்படி நேர் எதிர்விலகலில் சிக்கி இருக்கும் எலக்ட்ரான்கள் இணைந்து காந்தத் திரைகளை உருவாக்கி விடுகின்றன, மய்யத்தில் இருந்து புறப்பட்ட பிளாஸ்மாக்கள் காந்தத் திரைகளில் சிக்குண்டு அதிலிருந்து வெளியேற வழியில்லாமல் நேர் எதிர் மரணக்கிணறு போன்ற சர்க்கஸ் விளையாட்டில் சுற்றிக்கொண்டு இருக்கும்.- போட்டான்கள் மோட்டார் சைக்கிள் வீரனைப்போல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
இப்படிச் சுற்றிக்கொண்டு இருக்கும் போது காந்தத் திரைகளில் எங்காவது இரண்டு எதிர் துருவ எலக்ட்ரான்களின் வினையால் காந்தச் சுவற்றில் சிறிதளவு இடைவெளி கிடைத்தாலும் அந்த இடைவெளியின் வழியாக போட்டான் வெளிவந்துவிடுகிறது. மய்யப் பகுதியைச் சுற்றியும் இது போன்ற எண்ணிலடங்கா காந்தத் திரைகள் உள்ளன, ஒரு காந்த அடுக்கில் இருந்து வெளிவந்தால் அடுத்த காந்த அடுக்கிற்குள் மீண்டும் சிக்கிக்கொண்டு மீண்டும் நீண்ட காலம் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
இங்கிருந்து வெளிவந்த போட்டான்கள் இரண்டாம் அடுக்கான வெப்பச்சலனப் பகுதியில் நுழைகிறது. இந்த வெப்பச்சலனப் பகுதியில் வெப்பம் நேரடியாக வெளியேறுவதில்லை, எப்படி நமது பூமியில் சவ்வூடு பரவல் முறை இருக்கிறதோ அதே போல் இந்த வெப்பச்சலனப் பகுதியில் வெப்பக் காற்றின் அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் வெப்பம் கடத்தப்படுவது முற்றிலும் நின்று போகிறது. தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டு ஒரு பலூனை ஊதினால் அது தண்ணீரை விலக்கிக்கொண்டு பெரிதாக மாறுகிறது.
இருப்பினும் அந்த தண்ணீரின் அழுத்தம் பலூனின் வெளிப்பகுதியை அழுத்தும் போது பலூனில் ஆங்காங்கே உட்புறமாக சிறிய குழிகள் தோன்றுவதைக் காணலாம், இதே தான் சீரற்ற வெப்ப அழுத்தம் உள்ள சூரியனின் இரண்டாம் அடுக்கில் ஏற்படுகிறது, அங்கே வெப்பம் வெளியேற முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டு இருக்கிறது, இந்த சுழற்சியில் அகப்பட்டு காந்தச் சுவற்றிலிருந்து தப்பி வந்த போட்டானும் சுழன்று கொண்டே இருக்கும். சுற்றிக்கொண்டு இருக்கும் பிளாஸ்மாக்கள் பலம் இழந்த நிலையில் வெளியேறும்.
இந்த வெப்பச்சலனப் பகுதியை அடுத்து வெப்ப வாயுக்கள் திரவ வடிவில் இருக்கும் பகுதிக்கு வெளி திரவ மய்யம் என்று பெயர். இது மய்ய அடுக்கின் இரண்டாம் பாகமாகும். இந்த திரவ வடிவ வாயுக்களில் நமது பூமியை விட 500 மடங்கு வெப்ப வாயுத்திரவங்கள் உள்ளன. இந்த வாயுத்திரவங்கள் ஏற்படுத்தும் அலைகள் நமது பூமி மட்டுமல்ல சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் பாதிக்கின்றன, இங்கிருந்து புறப்படும் காந்தப் புலமானது கோள்கள், விண்கற்கள் உள்ளிட்ட சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் இயக்கத்தையும் கட்டுப்படுத்து-கின்றன.
இந்த திரவ வாயுப்பகுதியில் வந்தடைந்த போட்டான்கள் வலுவிழக்க ஆரம்பிக்கின்றன. இந்த திரவ வாயுவில் வரிசைக்கிரமமாக போட்டான்கள் மிதந்த வண்ணம் உள்ளன, இந்தப் பகுதியில் நமது பூமியில் ஏற்படும் பூகம்பங்களைப் போன்று சிறிய, பெரிய பூகம்பங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன, இந்த பூகம்பங்களின் காரணமாக வரிசையாக உள்ள போட்டான்கள் வெளித் தள்ளப்படுகின்றன. இவ்வாறு வெளித்தள்ளப்படும் போட்டான்கள் வெண்மை நிறப் பேரோளியை உமிழ்ந்த வண்ணம் தனது பயணத்தைத் தொடரும்.
இந்தப் பகுதியில் காந்தப்புலத்தின் உரசல் காரணமாக போட்டான்கள் மின்னோட்டம் பெற்றவைகளாக மாறிவிடுகின்றன. இவ்வாறு மாறிய போட்டான்கள் ஒவ்வொன்றும் 25000 மெகாவாட் மின்னல் தரும் சக்தியைப் பெற்றதாக மாறிவிடுகின்றன. இதன் காரணமாக இந்தப் பகுதி பேரொளியைப் பெற்று பேரொளி மண்டலம் என்று பெயர் பெற்றுள்ளது.
இப்பேரொளி மண்டலத்தில் உள்ள போட்டான்கள் அப்படியே சூரியனை விட்டு வெளியே வர இயலாது, இப்பேரொளிப் படலத்தில் நிறமாலைப் பிரிவுகள் ஏற்படுகின்றன, இங்கு தான் நமது பார்வைக்குத் தெரியும் ஏழு வண்ணங்கள் உருவாகின்றன. இந்த நிறப்பிரிகை காரணமாக போட்டான்கள் அணுக்களுடன் இணைந்து கொள்கின்றன.
பேரொளி மண்டலத்தை விட்டு வெளியேவந்த போட்டான்கள் அணுக்களுடன் ஒட்டிக்கொள்வதால் பல்வேறு தனிமங்கள் உருவாகின்றன-. இந்த பகுதி பல்வேறு வண்ண மின் விளக்குகள் போல் மிளிர்ந்துகொண்டு இருக்கும், ஆகவே இந்தப் பகுதியை நிறமண்டலப் பகுதி என்று அழைக்கின்றனர்.
இதை நாம் வீட்டில் கூட காணலாம். நமது எரிவாயு அடுப்பின் அருகில் தாமிரக் கம்பியைக் கொண்டு சென்றால் இளம் நீல வண்ண சுவாலை தோன்றும். இரும்புக் கம்பியைக் கொண்டு சென்றால் அடர் மஞ்சள் நிற வண்ணம் தோன்றும். பித்தளைக் கம்பியைக் கொண்டு சென்றால் இளம் மஞ்சள் அல்லது பழுப்பு நிறவெண்மை வண்ணம் தோன்றும். இதற்கு காரணம் அந்த தனிமங்களில் உள்ள அணுக்களில் உள்ள போட்டான்கள் வெளியேறும்போது இந்த வண்ணமாற்றம் ஏற்படுகிறது. மிகவும் எளிதான எடுத்துக்காட்டாக கூறவேண்டுமென்றால் வானவேடிக்கையில் தோன்றும் பல்வேறு வண்ணங்களும் பல தனிம உப்புக்களை வெடிமருந்துடன் கலந்து வெடிக்கும் போது ஏற்படுகின்றனவே, அதைச் சொல்லலாம்.
(சூரிய ஒளியின்பயணம் இன்னும் இருக்கிறது. அடுத்த இதழில் பார்ப்போம்)