ஆசிரியர் கி.வீரமணி தாத்தா பிறந்தநாள்: டிசம்பர் 2
ஆசிரியர் கி.வீரமணி தாத்தா பிறந்தநாள்: டிசம்பர் 2
எனக்குப் பிடித்த ஆசிரியர் அய்யா
84 வயதிலும் 18 வயது இளைஞனைப் போல சுறுசுறுப்பாக நம் நாட்டு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, நாட்டில் மற்றும் நம் மாநிலத்தில் ஏற்படும் அநீதிகளை எதிர்த்து, அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாகத் திகழும் அய்யா ஆசிரியர் அவர்களிடம் எனக்கு பிடித்தவை நிறைய உண்டு.
அய்யா அவர்களின் பேச்சு எனக்கு மிக பிடிக்கும். அவர் அவருடைய உரையில் நகைச்சுவை கலந்து செய்திகள் கூறுவதில் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அதுமட்டுமல்லாமல் சிறிரங்கத்தில் கோவிலுக்கு முன் அய்யா பெரியாரின் முழு சிலை வைக்கப்பட்டிருந்ததாகவும், சிலை திறப்பிற்கு முன் நாள் சில இந்து முன்னனியினர் சிலையை உடைத்ததினால் என்ன செய்வது என்று கேட்டபோது அய்யா பெரியார் கை நீட்டி பேசுவது போன்ற சிலையை வைக்க சொன்னீர்கள் என்று என் அப்பா கூறினார்.
அப்போது உங்களின் சிந்தனையைக் கண்டு வியந்தேன். அதுமட்டு-மல்லாமல் நீங்கள் 12 வயதில் மேடை ஏறி பேசி, 29 வயதில் கழகத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றியதாகவும் கூறினார்.
ஆசிரியர் அய்யா பற்றி நான் அறிந்தவை:
பிறந்த தேதி : டிசம்பர் – 2, 1933
ஊர் :- கடலூர் மாவட்டம், முதுநகர்
இயற்பெயர் -: சாரங்கபாணி
பெரியாரை பார்த்தது -: 1944 சூலை 29
முதல் உரை -: இராமநாதபுரம் மாவட்டம்
படிப்பு -: வி.கி., ஙி.லி.
23 வயதில் முதுகலை வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று தங்கபதக்கம் பெற்றார்.
27 வயதில் சட்டக் கல்வி முடித்தார்.
ஆசிரியர் :
-29 வயதில் விடுதலை பத்திரிக்கையின் நிறுவாக ஆசிரியர்
38 வயதில் ஆங்கில மாத இதழின் ஆசிரியர்
65 வயதில் பெரியார் பிஞ்சு ஆசிரியர்
பொறுப்புகள்:
1962 முதல் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்
2003 முதல் திராவிடர் கழகத்தின் தலைவர்
வி. தங்கமணி,
பதினொன்றாம் வகுப்பு,
சென்னை