2016 கடந்து வந்த பாதை செல்வி ஜெ.ஜெயலலிதா
2016 கடந்து வந்த பாதை
செல்வி ஜெ.ஜெயலலிதா
2016-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவு.
அவரது வாழ்க்கைக் குறிப்பு
பெயர்: ஜெ.ஜெயலலிதா
பிறப்பு: 24 பிப்ரவரி 1948; மேல்கோட்டை, மாண்டியா, கர்நாடகா
பெற்றோர்: ஜெயராம் -_ வேதவல்லி
படிப்பு: பெங்களூர், பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
மெட்ரிக் சென்னை, சர்ச் பார்க் ப்ரேசென்டேஷன் கான்வென்ட் (1958 -_ 1964)
கல்லூரி புகுமுக வகுப்பு _- ஸ்டெல்லா மேரீஸ் (நிறைவு செய்யவில்லை)
நடிப்பு: ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின்மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
மொத்தம் 127 திரைப்படங்கள்
அரசியல்: 1981இல் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989ஆவது ஆண்டில் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர்.
1991இல் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001, 2011, 2016 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
சாதனைகள்: 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்றி சமூகநீதியை உறுதிபடுத்தினார்.
இவரது காலத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டம், மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
மறைவு: 05 டிசம்பர் 2016
– தென்றல் கலை,
ஆவடி.