பொது நலமே இவர் சுயநலம்!
புகழால் உலகை வென்றவராம்!
தம்பி தம்பி கதை கேளு
தாத்தா பெரியார் கதை கேளு
ஈரோடு நகரில் பிறந்தவராம்
ஈடிலாத் தலைவராய் இருந்தவராம்!
ஜாதியைப் போக்க உழைத்தவராம்
சாத்திரக் குப்பையை அழித்தவராம்
நீதிநெறிவழி நின்றவராம்
நீண்ட பயணம் செய்தவராம்!
மூடக்கருத்தைச் சாடி ஒழிப்பதே
மூச்சாய்க் கொள்கையாய்க் கொண்டவராம்
சுயமாய்ச் சிந்திக்கச் சொன்னவராம்
சுயமரியாதையைக் காத்தவராம்!
மனிதத் தொண்டு புரிந்தவராம்
மழையாய்க் கருத்தைப் பொழிந்தவராம்
மனித நேயம் படைத்தவராம்
மடமைச் செயல்களை ஒழித்தவராம்!
– தங்க.சங்கரபாண்டியன்
புகழால் உலகை வென்றவராம்!
கூனிக் கிடந்த தமிழனை நிமிரவைத்தவர்
எழுத்தறிவற்ற, படிப்பறிவற்ற தமிழனை,
அறிய வைத்தவர்…
வழியறியாத தமிழனுக்கு வழிகாட்டியவர்
சொரணையற்ற தமிழனை சூடேற்றியவர்
இனம் அறியா தமிழனுக்கு இனம் கண்டவர்
மானமற்ற தமிழனுக்கு மானம் பெற்றுத் தந்தவர்
பாழ்பட்டுக் கிடந்த தமிழனுக்கு
பகுத்தறிவை ஊட்டியவர்..
இனிவரும் உலகம் கண்டவர்
மண்ணாய்க் கிடந்த
பெண்ணை மானமிகுவாக்கியவர்…
பொதுநலத்தையே தன்
சுயநலமாக எண்ணியவர்
தன் நிலை மறந்து
உன் நிலைகாண அயராதுழைத்தவர்.
அவர்… பெரியார்! பெரியார்! பெரியார்!
பார் புகழும்
நம் பெரியார் வாழ்கவே!
நம் பெரியார் வாழ்கவே!
நம் பெரியார் வாழ்கவே!
– வை.நடராசன், நாமக்கல்