பை நாளும், பை அண்ணளவு நாளும்
பை நாள் (PI Day) என்பது மார்ச் 14. ஆனால், அது ஏன் மார்ச் 14?
மாதம்/தேதி என்ற தேதியமைப்பின்படி மார்ச் 14 என்பது 3/14 என்று வரும். அது பை மதிப்பான 3.14அய்க் குறிப்பது போல் இருப்பதால் அப்படித் தேர்தெடுத்துள்ளார்கள்.
பை அண்ணளவு நாள் (PI Approximation Day) என்பது ஜூலை 22.
தேதி/மாதம் என்ற தேதியமைப்பின்படி ஜூலை 22 என்பது 22/7 என்று வரும். பையின் மதிப்பை அண்ணளவாகக் கண்டுபிடிக்க இந்த வகுத்தல் அமைப்பையே நாம் பயன்படுத்துவதால் அப்படித் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
இன்னொன்றையும் கவனியுங்கள். வட்ட வடிவில் இருக்கும் ஒரு உணவிற்குப் பெயர் PIE. அதனை பல்வேறு விட்டங்களாய் வெட்டும்பொழுது கிடைக்கும் துண்டுகளுக்குப் பெயர் PIE Slices.. வட்டத்திற்கும் பை(PI)க்கும் தொடர்பிருப்பது தெரிந்தோ தெரியாமலோ அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது அந்த உணவிற்கு.
PIன் மதிப்பான 3.14 என்பதைக் கையால் எழுதிக் கண்ணாடியில் பார்த்தால் அது PIE எனத் தெரியும்.
பாபு பி.கே