டைனோசர் மியூசியம் போவோமா?
– ஹரிஸ்
சில காலம் முன்னால் அகரன் ஓடிவந்து, “அப்பா நாம டைனோசர் மியூசியம் போவோமா” அப்டின்னு மூஞ்ச கொண்டு வந்து முகத்துக்கு நேரா வெச்சுகிட்டு கேட்டான்.
வழக்கம்போல ஆமாம் சொல்லிட்டு தப்பிக்க முடியாது. சொன்னா சொன்ன மாதிரி நடந்துக்கணும். அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர். கொஞ்சம் யோசிச்சு, “சரி, அழைச்சுட்டுப் போறேன். ஆனா இப்ப இல்ல தமிழ் ஸ்கூல் லீவு விட்ட உடன்தான். சரியா?
“ஓ! சரிப்பா!”
தமிழ்ப் பள்ளி ஆண்டு விடுமுறை வந்தது.
நமக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ ஜெர்ரி எலிக்கு ஞாபகம் இருக்கும்.
அகரன்: ‘அப்பா டைனோசர் மியூசியம் போவோமா?’
அப்பா: (வேற வழி) ‘ம் சரி’
வீட்டில் இருந்து கிளம்பியதில் இருந்து, கால் தரையில் இருந்து ஒரு இன்ச் மேலதான் இருந்தது.
“அப்பா, டைனோசர் என்ன சாப்பிடும்?-”
“டைனோசர் ஏன் இப்ப இல்லை?”
“டைனோசருக்கு கை ஏன் சின்னதா இருக்கு?”
“டைனோசர் பல்லு ஏன் கூர்ப்பா இருக்கு?”
“டைனோசர் எவ்ளோ வேகம் போகும்?”
“காரை விட வேகமாகப் போகுமா?”
ஸ்… ஸப்பா…
மியூசியத்திலேயே நண்பகல் உணவு (ஙிமீமீயீ) முடிந்தது.
போனஸாக ழிணீtuக்ஷீணீறீ பிவீstஷீக்ஷீஹ் விusமீuனீல் ஒரு பட்டாம்பூச்சி மியூசியம் கிடைத்தது.
ஒரு பட்டுப்புழு எப்படி பட்டாம்பூச்சி ஆகிறது? என்பதை அழகான பசுமைக் குடிலில் (நிக்ஷீமீமீஸீ லீஷீusமீ) சிறப்பாக உயிரோடு காட்டி இருந்தார்கள்.
எங்கே பார்த்தாலும் சிறுவர்கள். இதுதான் ஆங்கிலேயரிடம் நாம் கற்க வேண்டியது. லீவ் என்றால் கோயில், குளம், பூஜை, புனஸ்காரம் என்று இல்லாமல், விusமீuனீ, ணிஜ்லீவீதீவீtவீஷீஸீs, ஜிக்ஷீணீஸ்மீறீறீவீஸீரீ, நிணீக்ஷீபீமீஸீவீஸீரீ, ஜிக்ஷீமீளீளீவீஸீரீ & ளிutவீஸீரீ என்று கௌம்புவது.
கடைசியாகத் திரும்பும் முன்னால் கடையில் உள்ள விளையாட்டு சாமான்கள் எல்லாத்தையும் காட்டி, “அத வாங்குவோமா? இத வாங்குவோமா?”ன்னு கேட்டான்.
எல்லா விளையாட்டு சாமானையும் அங்கேயே விளையாடிவிட்டு வெறும் கையோடு ‘பெரியார் இல்லம்’ திரும்பினோம்.
வரும்போது அகரன் கால் தரையில் இருந்து இரண்டு இன்ச்சில் இருந்தது.