வாசகர் மடல்
அன்புள்ள ஆசிரியருக்கு,
எட்டு -_ வழக்குச் சொல்
எட்டு -_ “சற்று போய்ப் பார்த்து வா..’’ என்று விளக்கம் தந்தது அருமை. “ஒரு எட்டு போய்ப் பார்த்து வா’’ எனவும் கூறுவர்.
– இராம.பார்த்தீபன், வயலூர்
அன்புடையீர்! வணக்கம்.
‘பெரியார் பிஞ்சு’ செப். 2017 இதழில் வெளியான ‘சிகரம்’ எழுதிய, ‘விட்டுக் கொடுப்போர் விலகாதிருப்பர்’ எழுத்தோவியம் அருமையிலும் அருமை. ‘மனிதநேயர் பெரியார்’ படக்கதை உண்மையில் அற்புதம். ‘பெரியார் தாத்தா 139’ வண்ணப்படம் உள்ளத்தை வெகுவாகக் கொள்ளை கொண்டது. ஓவியர் ஜீவாவிற்கு என் பாராட்டுகள்!
– தங்க.சங்கரபாண்டியன்,
மணலி புதுநகர், சென்னை -600103.