காட்டலோனியா
I. அமைவிடமும் எல்லைகளும்
¨ உலக வரைபடத்தில் அகலக்கோடு 410–_490 வடக்கு 10 _ 280 கிழக்கு அமைந்துள்ளது.
¨ போர்த்துகல், பிரான்ஸ், ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ ஆகியன அண்டை நாடுகளாகும்.
¨ கடல் எல்லைகளையும், தரை எல்லைகளையும் கொண்ட பகுதி.
¨ பரப்பளவு 32,108 கி.மீ2 (12,397 சதுர மைல்)
II. இயற்கை அமைப்பும் காலநிலையும்
¨ நிலவளம், கடற்கரை, மலைகள், ஆறுகள், ஏரிகள் என அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்த பகுதி ஸ்பெயின் நாட்டின் வளம் மிகுந்த பகுதி காட்டலோனியா.
III. பொருளாதாரம்
¨ ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் அய்ந்தில் ஒரு பங்கு காட்டலோனியாவிலிருந்து கிடைக்கிறது.
¨ புழக்கத்திலுள்ள நாணயம் யூரோ.
¨ ஸ்பெயினின் 25.6% ஏற்றுமதி பங்களிப்பைச் செய்கிறது.
¨ உள்நாட்டு உற்பதி 19 சதவீதம்.
¨ ஸ்பெயினுக்கு வரும் அன்னிய நேரடி முதலீடு 20.7% இந்த மாகாணத்திற்குப் போகிறது.
¨ ஏராளமான தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள் வங்கிகள் யாவும் இங்கு செயல்படுகின்றன.
IV. மொழியும் மக்களும்
¨ அரானஸ் (Aranese), காட்டலான், ஓக்ஸிடன், ஸ்பானிஷ் போன்ற மொழிகள் பேசப்படுகின்றன.
¨ 2016 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி காட்டலோனியாவின் மக்கள் தொகை 7,522,596.
¨ ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16% இங்கு வாழ்கின்றனர்.
¨ காட்டலோனியா தனி மொழி, தனிப் பண்பாடு, தனி தேசியக் கொடி, தனி தேசிய கீதம் என சுயாட்சியுடைய மாகாணம்.
V. தனிநாடு போராட்டம்
¨ ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான காட்டலோனியா, தனி நாடு கோரிக்கையை முன் வைத்துப் போராடிவரும் வேளையில், அந்நாட்டின் அரசைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவது குறித்து ஸ்பெயின் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
¨ தனிநாடு குறித்து ஸ்பெயினின் தடையை மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. இதில் 90% மக்கள் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
¨ காட்டலோனியா தனி நாடு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தது.
¨ 2014இல் இருந்து இரண்டு முறை தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
¨ இங்கிலாந்து, அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம் ஆகியவை காட்டலோனியா தனி நாடாவதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் தனி நாடு அங்கீகாரத்துக்கான முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்கிறது.
¨ தலைநகராக பார்சிலோனா அமையும்.
VI. விளையாட்டு
¨ கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, ரிங் காக்கி, டென்னிஸ், மோட்டார் விளையாட்டு போன்றவை முக்கிய விளையாட்டுகளாய் உள்ளன.
¨ தலைநகர் பார்சிலோனாவில் உலகப் பிரசித்தி பெற்ற காளைச் சண்டை விளையாட்டு நடத்தப்படுகிறது.
VII வரலாற்றுக் குறிப்பு
¨ அய்ரோப்பா கண்டத்தின் வளம் பொருந்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி.
¨ காட்டலோனியா பகுதி பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் இடையில் மாறி மாறி ஆளப்பட்டுள்ளது.
¨ ஒரு திருமண உடன்படிக்கையின் மூலமாக சில நிபந்தனைகளுடன் ஸ்பெயின் நாட்டுடன் இணைந்தது.
¨ அரகான் மண்டலத்துடன் இணைந்த காட்டலோனியா 19ஆம் நூற்றாண்டில் போர்களால் பாதிப்படைந்தது. சில தன்னிச்சையான அதிகாரங்கள் அளித்து ஸ்பெயின் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
VIII. மேலும் சில தகவல்கள்
¨ ‘சார்டனா’ என்பது காட்டலோனிய மக்களால் விரும்பி ஆடப்படும் பிரபலமான நடனம்.
¨ காட்டலோனிய மக்களில் பெரும்பான்மை யினோர் இசையில் ஆர்வமுள்ளவர்-களாக உள்ளனர். ரம்ப, ராக் மற்றும் பாப் இசைகள் பிரபலமாக உள்ளன.
¨ தேசிய தினம் செப்.11
¨ காட்டலான் தொலைக்காட்சி, காட்லானியா வானொலி ஆகியன அரசின் முழுக் கட்டுப்பாட்டில் காட்டலானியா, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் ஒளி_ஒலிபரப்பப்படுகிறது.
¨ மீன், கடல் உணவுகள், ஆலிவ் ஆயில் காய்கறிகள் போன்றவை முக்கிய உணவு பொருள்கள் ஆகும். பிரட்டில் தக்காளிக் கூழை சேர்த்து உண்ணுவது இங்கு பிரபலம்.
¨ காட்டலோனியாவிலிருந்து வெளிவரும் தினசரி இதழ்கள். காட்டலான், ஸ்பானிய மொழிகளில் வெளிவருகின்றன.
¨ ‘காஸ்டெல்’ என்ற மனிதக் கோபுரம் அமைப்பது விழாக் காலங்களில் நடைபெறுகிறது.
¨ கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்-படுகிறது.
¨ காட்டலோனியாவில் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரியச் சின்னங்கள் அதிக அளவு உள்ளன.
¨ வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள், மேம்படுத்திய சாலை வசதிகள், இருப்புப் பாதைகள் என அனைத்து போக்குவரத்து வசதிகளிலும் தன்னிறைவு பெற்ற மாகாணம்.