காற்றே காற்றே!
காற்றே காற்றே
கொஞ்சம் நில்லு நில்லு! – எங்கள்…
காதில் வந்து
கொஞ்சம் சொல்லு, சொல்லு!
கடவுள் என்றால் என்ன வென்று நீ
சொல்லு சொல்லு!
அதைக் கண்டவர்கள் யார்? – கண்டு
சொன்னவர்கள் யார்? சொல்லு சொல்லு
அதைச் சொன்னபின் – உன்
பாதையில் செல்லு செல்லு!
(காற்றே…)
உருவமில்லை என்று
சொன்னவர் யாரு? – அதற்கு
ஆயிரம் உருவங்களை
தந்தவர் யாரு?
கடவுளைப் படைத்தவன்
சிற்பி! சிற்பி!! – அதைக்
காண்போரிடத்திலெல்லாம்
கற்பி! கற்பி!!
(காற்றே…)
மடஉலகே மதவுலகென்று
மத்தளத்தைத் தட்டு, தட்டு!
மண்புழுவாய் நெளிவோன்
மண்டையில் கொஞ்சம் குட்டு, குட்டு!
பகுத்தறிவுப் பாதையை நீ
காட்டு, காட்டு! – அந்த
ஈரோட்டுச் சாலையில்
தேர் ஓட்டு, ஓட்டு!
(காற்றே…)
– கவிஞர் கலி.பூங்குன்றன்