உலக நாடுகள்
அமைவிடமும் எல்லைகளும்:
¨ ‘ஹங்கேரி’, அய்ரோப்பாவில் மய்யத்தில் உள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும்.
¨ உலக வரைபடத்தில் 47O 26` N 19O15` E ணி பகுதியில் அமைந்துள்ளது.
¨ இதன் வடக்கே சிலோவாக்கியா, கிழக்கே உக்ரைன், உருமேனியா, தெற்கே செர்பியா, குரோசியா, தென்மேற்கே சுலோவீனியா, மேற்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன.
¨ ‘புதாபெஸ்ட்’ இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும்.
¨ நாட்டின் மொத்த பரப்பளவு 93,000 சதுர கி.மீ. (35,000 சதுர மைல்)
¨ நிலப்பரப்பில் உலகின் 109ஆவது இடத்தில் உள்ளது.
மொழியும் மக்களும்
¨ ஆட்சிமொழி ஹங்கேரியன்.
¨ 83.7% ஹங்கேரியர், 14.7% ஏனையோர், 3.1% ரோமா, 1.3% ஜெர்மானியர் வாழ்கின்றனர்.
¨ மக்கள் தொகை 9.797,561 (உலக மக்கள் தொகையில் 92ஆம் இடம்)
¨ மொத்த மக்கள் தொகையில் 76% கிறித்தவர்களும், 3% மக்கள் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர்.
¨ 21% மக்கள் எந்த மதத்திலும் சாராதவர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்:
¨ ‘ஹங்கேரி’ அய்ரோப்பிய ஒன்றியம், நேட்டோ, பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது.
¨ போரிண்ட் (HUF) ï நாணயம் புழக்கத்தில் உள்ளது.
¨ ஹங்கேரி ஓர் உயர் -_ நடுத்தர _ வருவாயைக் கொண்ட நாடாக உள்ளது.
¨ ஹங்கேரி ஒரு பிரபலமான சுற்றுலா ஈர்ப்பு நாடென்பதால் ஆண்டுக்கு 10.67 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் பெருந்தொகை வருவாயாக கிடைக்கிறது.
வரலாற்றுக் குறிப்புகள்:
¨ ‘ஹங்கேரி’ என்ற பெயர் 7ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படுகிறது.
¨ ‘ஹங்கேரி’ நாடு இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது.
¨ ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன், கி.பி.1000ஆம் ஆண்டில் கிறித்துவ நாடாக மாற்றி அதன் அரசனானான்.
¨ முதலாம் உலகப் போரை அடுத்து, ‘ஹங்கேரி’ தனது 71% நிலப்பகுதியையும், 58% மக்கள் தொகையையும், 32% ஹங்கேரிய இனக் குடிகளையும் இழந்தது.
¨ இரண்டாம் உலகப்போரின் முடிவில் ‘ஹங்கேரி’, சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து 1947 முதல் 1989 வரை நாற்பதாண்டுகால கம்யூனிச ஆட்சி நிலவியது.
அரசு முறை
¨ 1989 அக்டோபர் 23இல் ‘ஹங்கேரி’ ஜனநாயக நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
¨ “ஒற்றையாட்சி நாடாளுமன்றக் குடியரசு’’ அரசாங்கம் நடைபெறுகிறது.
¨ தற்போதைய அரசுத் தலைவராக ‘யானேசு ஆடெர்’ பிரதமராக விக்டர் ஒர்பான் ஆகியோர் உள்ளனர்.
¨ சட்டமன்றம் ‘தேசியப் பேரவை’ என்று அழைக்கப்படுகிறது.
மேலும் பல தகவல்கள்:
¨ அய்ரோப்பிய ஒன்றியத்தில் அதிக அளவு இயற்கைத் தேன் உற்பத்தி செய்யும் நாடாகும். நாடு முழுவதும் 15,000 தேனி வளர்ப்பு மையங்கள் உள்ளன.
¨ ரோபினியா போலிடோசிசிய மலர்த்தேன் இங்கு மிகப் பிரபலம்.
¨ உலகின் மிகப் பெரிய வெப்பநீர்க் குகை உள்ளது.
¨ உலகின் இரண்டாவது பெரிய வெந்நீரூற்று ஏரி (ஏவீசு ஏரி) உள்ளது.
¨ நடு அய்ரோப்பாவின் மிகப் பெரிய ஏரி (பலத்தான் ஏரி) உள்ளது.
¨ அய்ரோப்பாவின் மிகப் பெரிய இயற்கை புல்நிலம் (ஓர்த்தோபாகி தேசிய வனம்) இங்குள்ளது.
¨ அதிக எண்ணிக்கையில் ஏரிகள் உள்ள நாடு.
¨ அதிக தொடர்ச்சியான புல்வெளிகள் உள்ள நாடு.
¨ ‘ஹங்கேரி’ உயர்தர சாலை வசதி, இரயில்வே, விமானம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்தில் தன்னிறைவு பெற்ற நாடு.
¨ ‘ஹங்கேரி’யில் உள்ள புதாபெஸ்ட் மெட்ரோ உலகின் இரண்டாவது பழமையான சுரங்க பாதை இரயில்வே ஆகும்.
¨ 5 பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன.
¨ ஒலிம்பிக்கில் கால்பந்தாட்டத்தில் 3 மூன்றுமுறை தங்கம் வென்ற நாடு.
¨ உலகின் ஆரோக்கியமான மக்கள் வசிக்கும் நாடு ‘ஹங்கேரி’.
¨ நாடு முழுக்க இளைஞர்களாலும், சிறுவர்-களாலும் கால் பந்தாட்டம் விரும்பி விளையாடப்படுகிறது.
¨ கலை, இலக்கியம், இசை, நடனம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் மக்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர்.
¨ பல அரசியல் கட்சிகள் கொண்ட நாடு.
¨ ‘ஹங்கேரி’ 19 மாகாணங்களாக பிரிக்கப்-பட்டுள்ளன.
¨ தரைப்படை, விமானப்படை போன்றவற்றில் வலிமையான நாடு.
¨ அறிவியல் தொழில்நுட்பத்தில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்த நாடு.
¨ பெரும்பான்மையினராக கற்றவர்கள் வாழும் நாடு.
¨ ‘ஹங்கேரி’யில் அனைவருக்கும் உயர்தரமான கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறது.
¨ “பீஸ் பல்கலைக்கழகம்’’ (1367), “வெஸ்ப்ரீம் பல்கலைக்கழகம்’’ என உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன.
¨ மருத்துவத்துறையில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடு என்பதால் பல், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சிகிச்சைகளுக்கு உலக மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.
¨ கட்டடக் கலையில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடு. புகழ்பெற்ற கட்டடங்கள் பல ‘ஹங்கேரி’யில் உள்ளன.