பிளாஸ்டிக்
பல் துலக்கப் பயன்படும் பிரஷ் முதல் பாத்ரூம் மக் வரை சகலமும் பிளாஸ்டிக் ஆகிவிட்டன. மளிகை முதல் உணவு, மருந்துகள் என அனைத்தும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு கிடைக்கின்றன. மலிவான விலையில், எளிதில் கிடைக்கக் கூடியது, எளிதில் அப்புறப்படுத்தக் கூடியது என்பதால், பிளாஸ்டிக்கின் மோசமான பின்விளைவு பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை.
பிளாஸ்டிக்கினால் விளைந்த கேடு:
ஒவ்வொரு ஆண்டும் கடலிலும், ஆற்றிலும் விழும் பிளாஸ்டிக் குப்பைகளால் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடல் பறவைகளும், கடல் பாலூட்டிகளும் உயிரிழக்கின்றன.
¨ ஒவ்வோர் ஆண்டும் 13 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்படுகின்றன.
¨ ஒரு நி-மிடத்திற்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
¨ பிளாஸ்டிக் உடைந்தாலும், கிழிந்தாலும் அது நச்சுகளை வெளியேற்றிக்கொண்டுதான் இருக்கும்.
¨ ஒரு பிளாஸ்டிக் பை அழிய 15 முதல் 100 ஆண்டுகள் வரை ஆகும்.
பிளாஸ்டிக்கைத் தவிர்க்க.. மாற்று வழிகள்…
¨ பிளாஸ்டிக் பிரஷ் பயன்படுத்தினால், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது, பிரஷ்ஷில் இருந்து அதிகமான ரசாயனம் வெளியாகும்.
¨ தண்ணீர் குடிக்க, பித்தளை, துரு ஏறா எஃகு stainless steel போத்தல்களைப் பயன்படுத்தலாம். மதிய உணவை எடுத்துச் செல்வதற்கு பிளாஸ்டிக் அல்லாத எஃகு பாத்திரங்களை எடுத்துச் செல்வது நல்லது.
¨ குழந்தைகளுக்கு பேபி பாட்டிலோ, பிளாஸ்டிக் அல்லது ரப்பர் முகிழ் (Nipple)
கொடுப்பதைத் தவிருங்கள். குழந்தைகளின் பால் போத்தலில் மிக மோசமான பிளாஸ்டிக் கலக்கப்படுகிறது. உணவு, மருந்து, தண்ணீர் போன்றவற்றை ஸ்பூன், பாலாடை, ஸ்டீல் கிண்ணம், ஸ்டீல் தம்ளரில் கொடுக்கலாம்.
¨ இளநீர், பழச்சாறு குடிக்கும்போது உறிஞ்சு குழலைத் தவிர்க்க வேண்டும்.
¨ கடைக்குச் செல்கையில், துணிப் பைகளை வைத்திருங்கள்.
¨ மூன்று ஆர் (R)-களை அதாவது REDUCE, REUSE, RECYCLE
என்பதை நாம் எப்போதும் கடைபிடித்தல் வேண்டும். அதாவது, பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைப்போம். தேவை எனில், ஏற்கனவே இருக்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வோம்.
இதைப் பின்பற்றினால் நம் உடலும், நாம் வாழும் பூமியும் ஆரோக்கியமாக இருக்கும்!
.
ந.சீதளாதேவி, சே.மரியம்,
ஒன்பதாம் வகுப்பு,
பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாபநாசம்,