செய்து அசத்துவோம்
தேவையான பொருட்கள்:
1. சிறிது தடிமனான, சிவப்பு நிற, செவ்வக வடிவ காகிதம், 2. ஸ்கேல், 3. கருப்பு நிற ஸ்கெட்ச் பென்.
செய்முறை
1. முதலில் சிவப்பு நிற காகிதத்தை திருப்பிவைத்து, அதை படம் 1இல் காட்டியபடி மேலிருந்து கீழாக மடித்துக்கொள்ளவும்.
2. பிறகு படம் 3இல் காட்டியபடி நான்கு பாகங்களாகப் பிரித்து, அதை இடது, வலது பக்கங்களாக உட்புறமாக மடித்துக் கொள்ளவும்.
3. படம் 4இல் காட்டியபடி இரு புனல்களையும் பிரித்து மடித்துக்கொள்ளவும்.
இப்பொழுது உங்களுக்கு சூப்பரான வீடு கிடைத்துவிடும். பிறகு ஸ்கேல் மற்றும் ஸ்கெட்ச் பென்னின் உதவியோடு கதவு, ஜன்னல் ஆகியவற்றை வரைந்துகொள்ளவும்.
செய்து அசத்துங்கள் பிஞ்சுகளே!
– வாசன்