வெற்றி
கதை : மு.கலைவாணன்
ஒவியம் : மு.க.பகலவன்
சிலந்தி ஒன்று மரத்தில் வலை பின்னிக் கொண்டிருந்தது.
மரத்தின் மற்றொரு கிளையில் இருந்த குருவி அதைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
காற்று பலமாக வீசும் போதெல்லாம் வலை அறுந்துவிடும்.
வலை அறுந்து போகும் போதெல்லாம் “தோற்றது சிலந்தி’’ என்று சொல்லிக் கொண்டிருந்தது குருவி.
எத்தனைமுறை காற்று சிதைத்தாலும், மீண்டும் மீண்டும் வலையைப் பின்னியபடியே இருந்தது சிலந்தி.
சற்று நேரத்தில் காற்றை எதிர்த்து வலையை முழுமையாகக் கட்டி முடித்தது சிலந்தி.
“ஆகா வென்றது சிலந்தி’’ என்றது குருவி.
அத்தோடு ஓயவில்லை சிலந்தி. வலையில் சிக்கியப் பூச்சிகளோடு போராடி, அதைத் தன் உணவாக்கிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் சிட்டுக்குருவி பாடிப் பறந்தது.
“தோல்வி என்பது நிலையல்ல!
வெற்றி என்பது முடிவல்ல!’’ <