சின்னச் சின்னக் கதைகள்
அச்சம்
இடுக்கிலிருந்து எட்டிப் பார்த்து தேள் சொன்னது, எனக்குக் கொடுக்கில் விஷம். என்னை யாரும் தொட முடியாது.
பொந்திலிருந்து தலையை நீட்டி பாம்பு சொன்னது, எனக்குப் பல்லிலே விஷம். என்னை யாரும் நெருங்க முடியாது.
பள்ளத்துச் சாக்கடை நீரில் சதிராடியபடி கொசு சொன்னது. நான் கடித்தால் நோயிலிருந்து யாரும் தப்ப முடியாது.
இதையெல்லாம் கேட்டபடி உயரத்தில் பறந்த தும்பி சொன்னது, இருட்டில் பதுங்கிக் கொண்டுதான் இப்படிப் பேச முடியும். வெளிச்சத்துக்கு வந்தால் இவையெல்லாம் அடிபட்டே சாகும். இவற்றின் பேச்சால் யாருக்கு என்ன பயன்?
நச்சுக்களின் பேச்சு
அச்சத்தின் அடையாளம்.
கதை ; மு.கலைவாணன்
ஓவியம் : மு.க.பகலவன்