காரணமின்றி ஏற்காதீர்
அதிர்ஷ்டம் இருந்தால் அனைத்தும் வரும்
லாட்டரி சீட்டில் பரிசு விழுந்தாலோ அல்லது திடீரென ஒரு நன்மை வந்து சேர்ந்தாலோ அதிருஷ்டம் வந்துவிட்டது என்று கருதுகின்றனர்.
இலட்சக்கணக்கானோர் லாட்டரி சீட்டு வாங்கும் போது, அதில் ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்தால் அவர் அதிருஷ்டசாலி என்றும், அவருக்கு அதிருஷ்டம் வந்து விட்டது என்றும் நம்புகின்றனர்.
இலட்சக்கணக்கான லாட்டரிச் சீட்டு எண்களைக் குலுக்கியெடுக்கும் போது ஏதாவது ஒரு எண் வந்துதானே ஆகவேண்டும். அப்படி வரும் எண்ணுக்குரியவர் அதிருஷ்டசாலி என்பது எப்படிச் சரியாகும்.
உண்மையிலேயே அதிருஷ்டம் என்றால் அந்த குலுக்கலில் அவருக்குத்தான் பரிசு விழ வேண்டும் என்பது அர்த்தமாகிறது. அப்படியென்றால், எத்தனை முறை திரும்பத் திரும்பக் குலுக்கியெடுத்தாலும் அவருடைய எண்ணே வர வேண்டும். அப்படி வந்தால் உண்மையில் அதிருஷ்டம் என்று ஒன்று உண்டு என்று அர்த்தம்! அப்படி வருமா? வராதே!
ஒவ்வொரு முறை குலுக்கி எடுக்கும் போதும் ஒவ்வொரு (வெவ்வேறு) எண்ணல்லவா வரும்? அப்படியென்றால் அதிருஷ்டம் என்பதற்கு என்ன பொருள்? ஏதாவது ஓர் எண் வந்துதானே ஆக வேண்டும்? எனவே, அப்படி ஓர் எண் வருவது அதிருஷ்டம் என்பதால் அல்ல. இந்தக் கேள்வியைச் சமாளிக்கத்தான் அதிருஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்று கதையளக்கிறார்கள்.
ஒரு கும்பலில் மேலிருந்து ஒரு கல் விழுந்தால், யாராவது ஒருவர் தலையில் விழுந்துதானே ஆகவேண்டும்? அப்படி விழுகின்றவர் அதிருஷ்டம் இல்லாதவர் என்று அர்த்தமா? திரும்பவும் அதே கல்லை மேலிருந்து போட்டால் அவர் தலையிலேயா விழும்? வேறு ஒருவர் தலையிலேதானே விழும்? இங்கு அதிருஷ்டம், துரதிருஷ்டம் என்பதற்கு என்ன வேலை?
இன்னும் சொல்லப் போனால், அதிருஷ்டம் என்ற சொல்லை ஆராய்ந்தால் நாம் இங்கு சொல்வதுதான் சரியென்று புரியும்.
திருஷ்டம் என்ற சொல்லுக்குப் பார்வை என்று பொருள். கண்பட்டு விட்டது என்பதைத் திருஷ்டிப்பட்டு விட்டது என்பது அதனால்தான். வடமொழியில் அ சேர்த்தால் எதிர்மறை பொருள் கொடுக்கும்.
சுத்தம்-அசுத்தம். அதுபோல் திருஷ்டம்-அதிருஷ்டம்.
திருஷ்டம் என்றால் பார்வை. அதிருஷ்டம் என்றால் குருட்டு நிலை என்று பொருள். அதனால்தான், ஏதாவது எதிர்பாராமல் கிடைத்தால்கூட குருட்டாம் பாக்கியம் என்று நடப்பில் சொல்வதுண்டு.
எனவே, அதிருஷ்டம் என்றாலே எதிர்பாராமல் குருட்டுத் தனமாக, வாச்சான் போச்சானாகக் கிடைப்பது. எனவே, கொடுப்பினை, விதி, கடவுள் அருள், யோகம், நல்ல நேரம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை.
ஆக, அதிருஷ்டம் என்பதற்குக் குருட்டுத்தனம் என்பதுதான் சரியான பொருளே தவிர யோகம் என்பதல்ல. அதுவும் ஒருவருக்கு ‘உரியது’ அல்ல; வாச்சான் போச்சானாக அமைவதே!
பாம்பு பால் குடிக்கும்
பாம்பு பால்குடிப்பதாய் கூறப்படும் அனைத்துச் செய்திகளும் தப்பானவையே. காரணம் திரவப் பொருளை உறிஞ்சிக் குடிக்கும் அமைப்பு அதன் வாயில் இல்லை. பாம்புக்கு நாக்கு இல்லை.
என்ன வியப்பாக இருக்கிறதா? ஆனால் உண்மை அதுதான்.
பாம்புக்கு நாக்கு இல்லை. அது அடிக்கடி வெளியே நீட்டுவது அதன் மூக்குதான். அந்த மூக்கின் மூலமே இரையின் வாசனையை உணர்ந்து அதைக் கவ்விப் பிடிக்கிறது.
அதேபோல் பாம்புக்கு காது கிடையாது. எனவே, பாம்பு மகுடி இசை கேட்டு ஆடுவதாய்க் கூறுவது தப்பு. அது மகுடியின் அசைவைக் கண்டே ஆடும். மகுடியின் அசைவு நின்றால் உடனே கொத்தும். மகுடி இசை கேட்டு பாம்பு வந்ததாய்க் கூறுவது தப்பான செய்தியே!
எனவே, பாம்புக்கு பால் வைப்பதாய் கூறுவதும், பாம்பு அதைக் குடிப்பதாய் படங்களில் காட்டுவதும் தப்பான செய்திகள்.
அதேபோல் உடலில் ஏறிய நஞ்சை, பாம்பு உறிஞ்சி எடுப்பதாய்க் கூறுவதும் தப்பான கருத்து. உடலில் இரத்தத்தில் கலந்த நஞ்சு மீண்டும் தனியே வராது. மேலும் பாம்பால் உறிஞ்சி எடுக்கவும் முடியாது!
களிம்பு க்ரீம் பூசினால் கருப்பு தோல் சிவப்பாகும்
எந்த ஒரு க்ரீமும் கறுப்பு நிறத்தை சிவப்பாக மாற்றாது. க்ரீமை தொடர்ந்து பயன்படுத்தினால் தோலுக்கு தற்காலிகமாய் சிறிது நிறம் கிடைக்குமே தவிர, நிரந்தரமாக தோல் சிவப்பாக மாறுவது என்பது முடியாத ஒன்று. ஓர் ஆணோ பெண்ணோ கறுப்பாக இருப்பதற்குக் காரணம், அவர்களின் தோலில் உற்பத்தியாகும் மெலனின் (விமீறீணீஸீவீஸீ) எனப்படும் நிறமிதான். ஒரு குழந்தை பிறக்கும்போது சிவப்பாக இருக்கும்; வளர வளர மரபணுக்கு ஏற்ற மாதிரி மாநிறமாகவோ கறுப்பாகவோ மாறும். இதற்குக் காரணம் மெலனின்தான். மெலனின் குறைவாக சுரந்தால், சிவப்பு நிறம் கிடைக்கும். அதிகமாக சுரந்தால், கருப்பு நிறம் கிடைக்கும்.
பொதுவாக ஷிளீவீஸீ கீலீவீtமீஸீவீஸீரீ றிக்ஷீஷீபீuநீts எதுவாக இருந்தாலும் அதில் ஹைட்ரோகொய்னின் (பிஹ்பீக்ஷீஷீரீuவீஸீவீஸீமீ) எனப்படும் ஒரு வகையான “ப்ளீச்சிங்” பவுடர் பயன்படுத்தப்படுகிறது. அது தற்காலிகமாக அழுக்கு நீக்குவதால் கறுப்பு சற்று வெளுக்கும். மற்றபடி நிறம் மாறாது. அந்த பளீர் ப்ளீச்சிங் பவுடர் தோலுக்கு கேடு தரும். எச்சரிக்கை!<