சிங்கப்பூர்
அமைவிடமும் எல்லைகளும்:
¨ சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் உள்ள பெரிதும் நகரமயமான ஒரு தீவு நகரம் -_ நாடு.
¨ ஒற்றை நகரம் என்பதால் சிங்கப்பூரே தலைநகரமும் ஆகும்.
¨ ஜொகூர் நீரிணை இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது.
¨ தெற்கில் சிங்கப்பூர் நீரிணை இந்தோனேசியாவிடமிருந்து பிரிக்கிறது.
¨ அண்டை நாடுகளாக மலேசியா, இந்தோனேசியா நாடுகள் உள்ளன.
¨ நாட்டின் மொத்த பரப்பளவு 704 கி.மீ2
(270 சதுர மைல்.)
பெயர்க்காரணம்:
¨ சிங்கப்பூர் சிங்கம்+ஊர்=சிங்கப்பூர். அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ்ப் பொருளைக் கொண்டது ஆகும்.
¨ இது சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது.
வரலாறு:
¨ சிங்கப்பூர் _ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது.
¨ 14ஆம் நூற்றாண்டில் ‘துமாசிக்’ என்ற பெயர் கொண்ட நகரமாக விளங்கியது.
¨ 15ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் ‘துமாசிக்’ நகருக்கு ‘சிங்கப்பூர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
புவியியல்:
¨ சிங்கப்பூர் 63 தீவுகளை உடையது.
¨ சிங்கப்பூர், மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் இரண்டு சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.
¨ ‘புகிட்திம்’ என்பது குறிப்பிடத்தகுந்த பெரிய காடாகும்.
பொருளாதாரம்:
¨ சிங்கப்பூர் ஆசியாவின் ‘ஜிப்ரால்டர்’ என்று அழைக்கப்படுகிறது.
¨ உலகில் உள்ள மிகப் பெரிய துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்று.
¨ சிங்கப்பூர் உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்று.
¨ உலகில் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 14ஆம் இடம்.
¨ இறக்குமதி செய்வதில் உலகளவில் 15ஆவது நாடு.
¨ இந்தியாவின் இரண்டாவது பெரிய அந்நிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும்.
¨ சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் வெள்ளி (Singapore dollar) யாகும்.
¨ இயந்திரப் பொறியியல் துறை, உயிரி மருத்துவ அறிவியல் துறை, வேதிப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன
¨ சிங்கப்பூர் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையும் சூதாட்ட விடுதிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன.
¨ சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாகும்.
¨ அதிக அளவில் பணக்காரர்கள் (மில்லியனர்கள்) உள்ள நாடு.
போக்குவரத்து:
¨ சிங்கப்பூர் சாலைகளின் மொத்த தொலைவு 3,356 கி.மீட்டர். இதில் 161 கி.மீ விரைவுச் சாலையாகும்.
¨ மேம்படுத்தப்பட்ட சாலை மின்னணுத் திட்டம் கொண்டு வரப்பட்டு மின்னணு முறையில் சுங்கம் வசூலிக்கப்படுகிறது.
¨ ஆசியாவில் பன்னாட்டு கப்பல் போக்குவரத்தின் முக்கிய மய்யமாக சிங்கப்பூர் விளங்குகிறது.
¨ ஒரு கப்பலின் பொருட்களை வேறு கப்பலுக்கு மாற்றும் மய்யமாகவும், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மய்யமாகவும் திகழ்கிறது.
¨ உலக அளவில் அதிகளவு கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாகவும், அதிக சரக்குகளைக் கையாளும் துறைமுக-மாகவும் சிங்கப்பூர் உள்ளது.
¨ 8 விமான நிலையங்களுடன் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி விமான மய்யமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது.
¨ சிங்கப்பூர் ‘சாங்கி’ (சிலீணீஸீரீவீ) விமான நிலையம் 80 விமானங்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.
¨ இங்கிருந்து 68 நாடுகளில் உள்ள 302 நகரங்களுக்கு உடனுக்குடன் விமான சேவை உள்ளது.
கல்வி:
¨ மாணவர்களின் பள்ளிக் கல்விக்கு பெரும்பாலும் அரசே உதவி செய்கிறது.
¨ அரசுப் பள்ளிகளின் பயிற்றுமொழியாக ஆங்கிலம் இருக்கிறது.
¨ ‘தாய்மொழி’ தவிர அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு தேர்வுகளும் ஆங்கிலத்திலேயே நடத்தப்படுகின்றன.
¨ சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ‘நன்யாங்’ தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களினுள் அடங்குகின்றன.
மொழியும் மக்களும்:
¨ ஆட்சிமொழியாக மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ் ஆகியவை உள்ளன.
¨ தேசிய மொழி மலாய். தேசிய கீதமும் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது.
¨ நாட்டு மக்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அல்லது 5 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்தமொழியாகப் பேசுகின்றனர்.
¨ சிங்கப்பூரின் அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தின் மொழியாக ஆங்கிலமே உள்ளது.
¨ சிங்கப்பூரில் பெரும்பான்மை (பாதி மக்கள்) மக்களின் மொழியாக சீனம் உள்ளது.
¨ சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய், தமிழர்கள், சீனர்கள், அரபு நாட்டினர் பண்பாடுகளே அதிக அளவு பின்பற்றப்படுகின்றன.
¨ மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் வெளிநாட்டவராக உள்ளனர்.
¨ மக்கள் தொகை 6 மில்லியன்.
¨ நிலப் பற்றாக்குறையால் அரசு நிதியுதவி பெற்ற, அடுக்குமாடி வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன.
¨ குழந்தை பிறப்பு குறைவாக உள்ள நாடு.
¨ பவுத்தம், கிறித்துவம், இசுலாம், டாவோயிசம், இந்து, சீக்கியம் போன்ற பல மதங்களைக் கொண்ட நாடு.
விளையாட்டு:
¨ பிரபலமான விளையாட்டுகள்: கால்பந்து, கூடைப்பந்து, துடுப்பாட்டம், நீச்சல், படகோட்டுதல், மேசைப்பந்து, பூப்பந்து ஆகியன.
¨ தண்ணீர் விளையாட்டுகளான ஸ்கூபா, டைவிங், கயாகிங், நீர்ச்சறுக்கு போன்றவை பிரபலமாக உள்ளன.
அரசு முறை:
¨ பாராளுமன்ற குடியரசு அரசாங்கம் நடைபெறுகின்றது.
¨ அதிபரும், பிரதமரும் அதிகாரமிக்கவர்கள்.
¨ சிங்கப்பூர் ஆரம்பத்தில் ஆங்கிலேய அரசிடம் காலனி நாடாக இருந்தது. பின்பு மலேசியாவிடம் இணைந்தது. இறுதியில், ஆகஸ்ட் 9, 1965இல் மலேசியாவிடமிருந்து பிரிந்து தனி நாடானது.
ஊடகங்கள்:
¨ ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்கள் உள்ளன.
¨ ‘வசந்தம்’ என்னும் தமிழ் தொலைக்காட்சி, ‘ஒலி’ என்னும் தமிழ் வானொலி, ‘தமிழ்முரசு’ என்னும் தமிழ் செய்தித்தாள் உள்ளிட்ட முன்னணி தமிழ் ஊடகங்கள் சிங்கப்பூரில் உள்ளன.
¨ அனைத்து ஊடகங்களும் அரசின் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டே இயங்குகின்றன.
¨ இங்கு ஊடக சுதந்திரம் குறைவு.
லீ குவான் யூ:
¨ லீ குவான் யூ பிரதமராக இருந்த 1959 முதல் 1990 வரையான காலப்பகுதியில், வேலையில்லா திண்டாட்டம், வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை ஆகியன தீர்க்கப்பட்டன.
¨ இவர் ‘சிங்கப்பூரின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
¨ இவராலேயே சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததுடன் நாட்டின் பொருளாதாரம், உள் கட்டமைப்பு ஆகியவை வளர்ச்சி அடைந்தன.<