செய்து அசத்துவோம் அழகிய கைப்பை
தேவையான பொருட்கள்:
1. செவ்வக வடிவிலான சிறிது தடிமனான அட்டை, 2. கத்திரி, 3. பசை, 4. அளவுகோல், 5. சிறிது தடிமனான கயிறு.
செய்முறை:
1. முதலில் செவ்வக வடிவ அட்டையை எடுத்துக் கொள்ளவும்.
2. பிறகு படம் 2இல் காட்டியபடி அட்டையை மூன்று பாகங்களாகப் பிரித்து இரண்டு கோடுகளை போட்டுக் கொள்ளவும். (மூன்று பாகங்களும் சம அளவில் இருக்க வேண்டும்.)
3. பிறகு படம் 3இல் காட்டியபடி முதல் பாகத்தில் அளவுகோல்கொண்டு வரைந்து கொள்ளவும்.
4. படம் 4இல் காட்டியபடி வெட்டிஎடுத்துக் கொள்ளவும். கீழ் பாகத்தில் நடுவில் ஒரு சிறிய கோடு போட்டு அதை (கீறியது போல்) வெட்டிக் கொள்ளவும்.
5. பிறகு அட்டையின் இரு ஓரங்களிலும் பசையை தடவிக் கொள்ளவும். பிறகு மேல்புறத்தை மடித்து, நடுவில் நாம் கீறி வைத்திருக்கும் ஓட்டையில் செருக்கிக் கொள்ளவும்.
6. மடித்து, ஒட்டிக் கொண்ட பிறகு படம் 6இல் காட்டியபடி இரு ஓரங்களிலும் சிறு ஓட்டைகளை போட்டுக் கொள்ளவும்.
7. பிறகு கயிறை எடுத்து இரு ஓட்டைகளிலும் விட்டு முடிந்து கொள்ளவும். இப்பொழுது அருமையான கைப்பை தயார். சரியா பிஞ்சுகளே! செய்து அசத்துங்கள்!
-வாசன்