பெரியார் பிறந்த நாள்!
![2018_sep_v35](https://periyarpinju.com/wp-content/uploads/2018/09/2018_sep_v35.jpg)
– தளவை இளங்குமரன், திருநெல்வேலி
பேருடனே பெருவாழ்வு!
பெற்றவரின் பிறந்த நாள்!
சீருடைய பதினேழு
செப்டம்பரில் பிறந்த நாள்!
ஆரியரின் ஆதிக்கத்தை
அடக்கியவர் பிறந்த நாள்!
ஊறும்மதம் ஜாதிப்பித்தை
ஒடுக்கியவர் பிறந்த நாள்!
காரிருளாம் மடமையினைக்
களைந்தவரின் பிறந்த நாள்!
பாரொளிரும் பகுத்தறிவுப்
பகலவனின் பிறந்த நாள்!
தீரமுடன் கள்ளடிமை
தீர்த்தவரின் பிறந்த நாள்!
வீரமுடன் பெண்ணடிமை
வீழ்த்தியவர் பிறந்த நாள்!
ஊரறியக் கடவுள் சிலை
உடைத்தவரின் பிறந்த நாள்!
கூறுமொரு இறைமறுப்புக்
கொள்கைவீரர் பிறந்த நாள்!
ஈரத்தமிழ் நெஞ்சமெலாம்
இனிதாய் வாழ்த்தும் பிறந்த நாள்!
பேரத்தமிழ்ப் பிஞ்சுகளின்
பெரியார் தாத்தா பிறந்த நாள்!