அறிந்துகொள்வோம்…
கேலாபேகாஸ் பூத வகை ஆமைகள் 225 கிலோ எடை உடையது. இது 100 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது.
லெதர்பேக் கடலாமைகள் பனிக்கரடியைவிட பெரிதாக இரண்டு மடங்கு வளரக் கூடியவை.
பீன்ஸ் விட்டமின்ஸ், மினெரல்ஸ், செம்புச்சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம் மற்றும் காந்தச் சத்து மிக்கவை.
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உயிருடன் இருக்கும் பொழுதே அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது இந்திய அரசாங்கம்.
உலக விலங்குகள் நல தினம் _ அக்டோபர் 4
உலக காடுகள் தினம் _ மார்ச் 21
உலக ஓசோன் தினம் _ செப்டம்பர் 16
உலக மக்கள் தொகை தினம் _ ஜூலை 11
போபால் துயர தினம் _ டிசம்பர் 2
புகையிலை எதிர்ப்பு தினம் _ மே 31
-ச.சஹானா,
ஏழாம் வகுப்பு ஆ பிரிவு
பாபநாசத்தில் உள்ள பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் படைப்புகளும் தொகுப்புகளும்…
கவிதை
நண்பா
முடியுமா? மறக்க முடியுமா?
உன்னால் முடியுமா?
என்னை மறக்க முடியுமா (முடியுமா)
மாங்காய் அடித்ததையும்
மண்டை உடைந்ததையும்
மறக்க முடியுமா? (முடியுமா)
ஆற்றில் குதித்ததையும்
அக்கரைக்குப் போனதையும்
மறக்க முடியுமா? (முடியுமா)
குரங்குப் பெடல் சைக்கிளில்
குப்புற விழுந்ததையும்
மறக்க முடியுமா? (முடியுமா)
எத்தனை நினைவுகள்
அத்தனை நினைவுகளையும்
மறக்க முடியுமா?
நண்பா மறக்க முடியுமா? (முடியுமா) –
– மு.ஹரிஹரன்,
8ஆம் வகுப்பு