அணுகுண்டால் அழியாதா கரப்பான் பூச்சி?
கரப்பான் பூச்சி பிளாட்டிடே (BLATTEDAE) என்ற விலங்கின வகையைச் சேர்ந்தது. கரப்பான் பூச்சிகள் 3500வகைகளாக பிரிந்து உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்துள்ளன. அண்டார்ட்டிகா, ஆர்டிக் துருவப் பிரதேசங்களில் மட்டும் இவை காணப்படவில்லை. பொதுவாக கரப்பான் பூச்சிகள் எதையும் உண்டு உயிர்வாழக்கூடிய ஜீரண மண்டல அமைப்பைக் கொண்டவை. துணிக்குப் போடும் சோப்பைக்கூட சுரண்டி சாப்பிட்டு ஜீரணித்துக்கொள்ளும்.
ஹீமோகுளோபின் இல்லாத காரணத்தால் கரப்பான் பூச்சியின் ரத்தம் வெண்மையாக இருக்கும். இதன் ரத்த ஒட்ட மண்டலமும், நரம்பு மண்டலமும் இணைந்து பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, எளிமையான முறையில் உடம்பு முழுவதும் பரவி, ஒவ்வொரு பகுதியிலும் அவற்றைக் கட்டுப்படுத்தும் அணுத்திரள்கள் இருப்பதால், இதன் தலையை வெட்டிவிட்டாலும், 15 நாட்கள் உயிர்வாழும் தன்மை கொண்டது.
மேலும் கரப்பான் பூச்சிகளின் மூளையில், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒன்பதுவிதமான மூலக்கூறுகள் உள்ளன. இவற்றை மருத்துவ உலகம் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் பெரும் ஆபத்து விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியாக்களிடம் இருந்து மனித குலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று WHO எனப்படும் உலக சுகாதாரக் கழகம் சொல்லியுள்ளது. அண்மைக்கால இன்னொரு கண்டுபிடிப்பு MRSA எனப்படும் எய்ட்ஸைவிட மிகவும் ஆபத்தான உயிர் குடிக்கும் நோயைக்கூட கரப்பான் பூச்சியின் உடம்பில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களைப் பயன்படுத்தி குணமாக்க முடியும் என்பதுதான்.
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுகளால் அழிக்கப்பட்டு அங்கே கதிரியக்கம் பரவி, எல்லா பூச்சி இனங்களும் அழிந்துபோயிற்று. ஆனால் உயிரோடு இருந்த ஒரே பூச்சியினம் மாவீரன் கரப்பான் பூச்சி மட்டுமே. காரணம், அதன் உடலில் உள்ள அபரிமிதமான நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள்தான் அபரிமிதமான நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள்தான்.