மன்னிச்சூ…
கடந்த செப்டம்பர் 2018 இதழில் சில எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்-காட்டியுள்ளனர் இலஞ்சி அறிவரசியும், அன்புச்செல்வனும்.
பக்கம் 19_இல் முதல் காலத்தில் கீழிருந்துமேல் 8ஆவது வரியில் கோடுப் என்பது கோடு என்றும்,
பக்கம் 23இல் பெட்டி 2இல் கடைசி வரியில் பாண்டித்துறை என்பது பாண்டித்துரை என்றும்,
பக்கம் 30இல் முதல் காலத்தில் கீழிருந்து மேல் 13ஆவது வரியில் வாடிகனுக்கு என்பது வாடிகனுக்குள் என்றும், அதே பக்கம் 2ஆம் காலத்தில் கீழிருந்து மேல் 2ஆவது வரியில் நாடுகலிலிருந்து என்பது நாடுகளிலிருந்து என்றும்,
பக்கம் 33இல் காலம் 2இல் கீழிருந்துமேல் 10ஆவது வரியில் பேனலுக்கு என்பது பேணலுக்கு என்றும், அதே காலத்தில் கீழிருந்து மேல் முதல் வரியில் சுற்றுச் சூழலைச் என்பது சுற்றுச் சூழலை என்றும்,
பக்கம் 34இல் மேலிருந்து கீழ் 14ஆவது வரியில் தின்றுச் என்பது தின்று என்றும் இருக்க வேண்டும்.
காஞ்சிபுரம் எஸ்.எம்.அபிநயா, வடக்கிழக்குப் பருவக்காற்று கட்டுரையில் ஒரிசாவுக்கு பதில் ஒடிஷா என்று இருக்க வேண்டும் என்றும், அதே கட்டுரையில் மற்றோர் இடத்தில் `பேனல் என்பது `பேணல் என்று இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! தவறுகளுக்கு மன்னிச்சூ!
– பொறுப்பாசிரியர்