மலேசியாவில் பெரியார் பிஞ்சு
பெரியார் பெருந்தொண்டர்கள் இரா.பெரியசாமி, கோ.ஆவுடையார் மற்றும் தோட்ட தொழில் ஆலோசகர் மு.கோவிந்தசாமி முயற்சியில் சுமார் நூற்று அய்ம்பது மாணவர்களுக்கு திங்கள் தோறும் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது என்கிற மகிழ்வான செய்தி கிடைத்துள்ளது.
அது மட்டுமல்லாமல், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அப்பர் தமிழ்ப் பள்ளியில் 120 மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள், நூல்கள், இனிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
காப்பார் நகரில் உள்ள மெதடிசு தமிழ்ப் பள்ளியில் பயிலும் 150க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பெரியார், டாக்டர் கி.வீரமணியின் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
புக்கிட் பெருந்தோங் நகரத் தமிழ்ப் பள்ளியில் 90 மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள் வழங்கப்பட்டன.
திராவிட இயக்க பணியாளரும் தோட்டத் தொழில் ஆலோசகருமான மு.கோவிந்தசாமி விளக்கவுரை நிகழ்த்தினார்.
பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையார், கு.க.இராமன், இரா.பெரியசாமி, அன்பு இதயன் மற்றும் கழகத் தோழர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தொகுப்பு: விமல்ராஜ்