செய்து அசத்துவோம்
சிறிய இருக்கை
தேவையான பொருட்கள்:
1. 3ஜ்3 செ.மீ. அளவுள்ள தடிமனான வண்ண அட்டை. 2. 12 தீக்குச்சிகள், 3. பெவிகால் பசை.
செய்முறை
1. முதலில் சதுரமான அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. 12 தீக்குச்சிகளையும் எடுத்து தலைப் பகுதியை நீக்கி விடுங்கள். 12 தீக்குச்சிகளை நான்கு, நான்கு குச்சிகளாக மூன்று விதமாகப் பிரித்து, அதில் நான்கு குச்சிகளை விடுத்து மற்ற எட்டு குச்சிகளில் நான்கை எடுத்து சிறிது முனையை உடைத்து எடுக்கவும், பிறகு அடுத்த நான்கு குச்சிகளை முன்பு உடைத்த குச்சிகளைவிட சிறியதாக வரும்படி உடைத்துக் கொள்ளவும். (படம் 2இல் உள்ளபடி)
3. மூன்று அளவுகளில் உள்ள குச்சிகளில் நடுத்தர அளவில் உள்ள நான்கு குச்சிகளை எடுத்து படம் 3இல் உள்ளது போல அட்டையின் ஓரங்களில் ஒட்டிக் கொள்ளவும்.
4. பிறகு படம் 4இல் உள்ளதுபோல நீளமான குச்சிகளைப் பயன்படுத்தி ஒட்டிக் கொள்ளவும்.
5. பிறகு இருப்பதிலேயே சிறிய குச்சிகளை எடுத்து இருக்கையின் அடியில் வரும் சட்டத்தை உருவாக்குங்கள்.
6. இருக்கையை திருப்பி வைத்துப் பார்த்தால் படம் 6இல் உள்ளது போலத் தோன்றும்.
7. இப்பொழுது விளையாட சிறப்பான சிறிய இருக்கை தயார். மினி ஸ்டூல் ரெடி. மறந்து அதன் மீது உட்கார்ந்து விடாதீர்கள்!
சரியா பிஞ்சுகளே! செய்து அசத்துங்கள்!
– வாசன்