கராத்தே வெற்றியாளர்கள்
திருவள்ளூர் மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் பொன்னேரி பெரியார் இல்லத்தைச் சேர்ந்த பெரியார் பிஞ்சுகள் பிரியதர்ஷினி (14) முதல் இடத்தையும், ஸ்ரீமதி (12) இரண்டாவது இடத்தையும் வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றிக்குக் காரணமாக பெண்களுக்குத் தன்னம்பிக்கையும், தற்காப்பும் அவசியம் என்று அறிவுறுத்திய பெரியார் படத்துடன் வெற்றியாளர்கள்!
மன்னிச்சூ
அக்டோபர் 2018 பெரியார் பிஞ்சு இதழில் பக்கம் 6இல் காலம் 2இல் இலக்கு என்பது இலக்க என்றும், விடையுடன் என்று வரும் இரு இடங்களிலும் விடையிலிருந்து என்றும் இருக்க வேண்டும். ஆறைக் காணோம் கதையில் அங்கும என்பது அங்கும் என்றும், 12-ஆம் பக்கம் முதல் பத்தி, 26ஆவது வரியில் ஆறு என்பது ஆற்று என்றும் அதே பக்கத்தில் பத்தி 2இல் கீழிருந்து மேல் 5ஆவது வரியில் உங்களுக்கென்ற என்பது உங்களுக்கென்ன என்றும், பக்கம் 16இல் திண்பண்டங்களை என்பது தின்பண்டங்களை என்றுமிருக்க வேண்டும். பக்கம் 33இல் விடிந்தவடன் என்பது விடிந்தவுடன் என்றும், பன்ற என்பது பண்ற என்றும்.
அதே பத்தியில் தோல்மேல் என்பது தோள்மேல் என்றும், 36ஆவது வரியில் என்ற என்பது என்று என்றும் இருக்க வேண்டும் என்று இலஞ்சி அறிவரசியும், அன்புச் செல்வனும் சுட்டிக் காட்டியுள்ளனர். பக்கம் 26இல் இடம் பெற்றுள்ள கட்டுரையின் கடைசி வரிகள் இடம்பெறவில்லை என்பதை திருவிடைமருதூர் விஜயலட்சுமி உள்ளிட்டோரும் சுட்டிக் காட்டியுள்ளனர். அக் கட்டுரை இவ்வாறு முடியும். ஆனால் உயிரோடு இருந்த ஒரே பூச்சியினம் மாவீரன் கரப்பான் பூச்சி மட்டுமே. காரணம், அதன் உடலில் உள்ள அபரிமிதமான நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள்தான்.
சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி! பிழைகளுக்கு மன்னிச்சூ..!
– பொறுப்பாசிரியர்