பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம்
தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் குறிப்பாக நாகப்பட்டினம் முதல் புதுக்கோட்டை வரை கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா?
ஒரே நாள் இரவில் பலகோடி மக்களின் வாழ்க்கை பெரும் இன்னலைச் சந்தித்திருக்கிறது. உங்களால் ஆன உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்திருப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதே வேளையில் கலிபோர்னியாவில் தீ, கேரளாவில் வெள்ளம், கஜா புயல், சில இடங்களில் வறட்சி என்று இயற்கைப் பேரிடர்களுக்கு புவி வெப்ப மயமாதலே காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அதைத் தடுக்க இன்னும் 12 ஆண்டுகளே உள்ளனவாம். இயற்கையைக் காக்க நாம் உறுதி கொண்டு செயல்பட்டால் மட்டுமே உலகைக் காக்க முடியும். இல்லையெனில் பேரிடர்களால் நாம் அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள் சூழலியலாளர்கள்.
நம் புவி! நாம்தான் காக்க வேண்டும்!