பஞ்சு அய்ஸ்கிரீம்
செய்து அசத்துவோம்
வாசன்
தேவையான பொருட்கள்
1. செவ்வக வடிவ பழுப்பு நிற அட்டை. 2. சிறிது பஞ்சு. 3. ஒரு பெரிய மணி (Bead) சிகப்பு நிறத்தில். 4. பல வண்ணத்தில் சிறிய மணிகள். 5. அளவுகோல். 6. பசை. 7. செல்லோடேப். 8. அடர் பழுப்பு நிற ஸ்கெட்ச் பென்.
செய்முறை
1. முதலில் பழுப்பு நிற அட்டையை எடுத்துக்கொள்ளவும்.
2. அதில் படம் 2இல் காட்டியபடி குறுக்கும், நெடுக்குமாக கோடுகளை ஸ்கெட்ச் பென் கொண்டு போட்டுக் கொள்ளவும்.
3. பிறகு அதை படம் 3இல் காட்டியபடி கூம்பு வடிவில் சுருட்டிக் கொள்ளவும். (Cone)
4. அதில் செல்லோ டேப் கொண்டு ஒட்டவும் (படம் 4)
5. இப்பொழுது பஞ்சை நன்கு தளர்வாக்கிக் கொண்டு அதில் வைக்கவும். (படம் 5)
6. அதன்மேல் படம் 6இல் காட்டியுள்ளதைப்போல பெரிய சிகப்பு மணியை பசை தடவி ஒட்டவும்.
7. பிறகு சிறிய மணிகளில் பசையைத் தடவி பஞ்சின்மேல் படம் 7இல் காட்டியபடி ஒட்டவும். இப்பொழுது சிறப்பான அய்ஸ்கிரீம் தயார்.
செய்து அசத்துங்கள்!