மன்னிச்சூ…
டிசம்பர் 2018 பெரியார் பிஞ்சு இதழில் பக்கம் 5இல் உள்ள பெட்டிச் செய்தியில் 3ஆம் வரியில் தன்சிறந்த குழந்தைகளுடன் என்பது தலைசிறந்த குழந்தைகள் என்றும், பக்கம் 8இல் உள்ள குட்டிச் சாதனையாளர் என்ற பெட்டிச் செய்தியில் மீட்டரை 14 நிமிடங்களில் என்பது, 14 நிமிடங்களில் என்றும், பக்கம் 16இல் உள்ள அறிவியலுக்கு ஆர்வமே முக்கியம் என்ற பெட்டிச் செய்தியில் 13ஆம் வரியில் புள்ளியில் துவங்கும்தான் என்பது புள்ளியில்தான் துவங்கும் என்றும் இருக்க வேண்டும் என்ற திருவிடைமருதூர் தீபிகா சுட்டிக்காட்டியுள்ளார். பிழைகளுக்கு மன்னிச்சூ…! தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
– பொறுப்பாசிரியர்
கணிதப் புதிர்
சுடோகு
சாதனை
பிஎஸ்எல்வி ராக்கெட்டின் சாதனை
இஸ்ரோவில் 1970களில் உருவாக்கப்பட்ட எ.எஸ்.எல்.வி எனும் ராக்கெட்டின் செழுமை வடிவம்தான் இந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட். IRS-IE என்ற தொலைஉணர்வு செயற்கைக் கோளை ஏவ 1993இல் முதன்முதலில் பிஎஸ்எல்வி பயன்படுத்தப்பட்டபோது அது தோல்வியை சந்தித்தது. மீண்டும் 1994லும், 1996லும் ஏவப்பட்டது. அப்போது அவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. அது முதல் இதுவரை ஒரு தோல்வியும் இல்லாமல் நிலவுக்குச் சென்ற சந்திராயன், செவ்வாய்க்குச் சென்ற மார்ஸ் ஆர்பிடர் மிஷன் உட்பட அடுத்தடுத்த 43 தொடர் வெற்றிகளை சந்தித்து உலகை வியக்க வைத்துள்ளது.
இன்று சிறு மற்றும் நுண் செயற்கைக் கோள்களை ஏவ இந்த ராக்கெட்தான் பொருத்தமானது என பன்னாட்டு அளவில் ஏற்றுக் கொள்ளப்படும்படியாக, ஒரே ஏவுதலில் நூறு சிறு மற்றும் நுண் செயற்கைக் கோள்களை பல்வேறு சுற்றுப் பாதையில் ஏவி சாதனை புரிந்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று எட்டு நாடுகளைச் சேர்ந்த 31 செயற்கைக் கோள்களை இந்த ஏவுகணை சுமந்து சென்றது. அத்துடன் இந்தியாவின் ஹைசிஸ் (Hyper Spectral Imaging Satellite) அதாவது கூர்மையான கண் என்று பெயர் சூட்டப்பட்ட செயற்கைக் கோளும் இந்த ஏவுகணையில் செலுத்தப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவின் 23 செயற்கைக் கோள்கள் இந்த பி.எஸ்.எஸ்.வி.சி-_43 ஏவுகணைவுடன் விண்ணில் செலுத்தப்பட்டன.
நுண்செயற்கைக் கோள்களை தாழ் விண்வெளிப் பாதையில் செலுத்த நம்பகமான மற்றும் செலவு குறைந்த வாய்ப்பாக பிஎஸ்எல்வி ராக்கெட்டை உலகம் வியந்து பார்க்கிறது.
– மகிழன்