ருமேனியா
உலக நாடுகள்
சந்தோஷ்
அமைவிடமும் எல்லையும்:
தென்கிழக்கு அய்ரோப்பாவின் நடுப் பகுதியிலுள்ள நாடு ருமேனியா.
கார்பாத்திய மலைகள் நாடு முழுவதிலும் பரவி உள்ளன.
வடக்கில் பால்கன் தீபகற்பம் உள்ளது.
தெற்கு எல்லையாக தன்யூப் ஆறும், பல்கேரியாவும் உள்ளன.
மேற்குப் பக்கம் ஹங்கேரியும் செர்பியாவும் அமைந்துள்ளன.
நாட்டின் பரப்பளவு 91,699 சதுர மைல் (2,37,500 ச.கி.மீ.)
தலைநகரம் புகாரெஸ்ட்
அய்ரோப்பாவின் பன்னிரண்டாவது பெரிய நாடு.
தன்யூப் நதி ருமேனியவிற்குள்ளேயே கருங்கடலில் சென்று சேருமிடம் தன்யூப் நதியின் வடிநிலமாக அமைகிறது.
மக்களும் மொழியும்:
பெரும்பான்மையான ருமேனிய மக்களுடன், சிறுபான்மை ஹங்கேரியர்களும் கலந்து வாழ்கின்றனர்.
ருமேனிய மொழியே ஆட்சி மொழி.
வேறு மொழிகளான ஹங்கேரியம், ஜெர்மன், துருக்கி, கிரேக்கம் ஆகியவையும் பேசப்படுகின்றன.
ருமேனியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும்.
ருமேனியர்கள் 89.5%, ஹங்கேரியர்கள் 6.6%, ரோமா 2.5%, ஏனைய சிறுபான்மையினத்தவர் 1.4% வாழ்கின்றனர்.
தேசிய மதமென்று எதுவும் இல்லை.
மக்கள் ருமேனியன் என்று அழைக்கப்படுகின்றனர்.
மக்கள்தொகை 2,14,98,616 மில்லியன், மக்கள்தொகை தர வரிசையில் உலகில் 52ஆவது இடம்; அய்ரோப்பிய ஒன்றியத்தில் ஏழாவது இடம்.
பள்ளிக்கூடங்களில் முக்கிய அயல்நாட்டு மொழிகளாக ஆங்கிலமும், பிரெஞ்சும் கற்றுத்தரப்படுகின்றன.
20,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே ஒரு மதத்தை ருமேனியாவில் அதிகாரபூர்வமாக பதிவு செய்ய இயலும்.
ஹோமோ சேபியன்ஸ் மனித இனத்தைச் சார்ந்த முதல் மனிதன் ருமேனியாவைச் சார்ந்தவனாக இருக்கலாம் என ஆய்வாளர் கூறுகின்றனர்.
வரலாறு:
ருமேனியா என்ற பெயர் ரோமன் (Roman) என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.
ருமேனியர்கள் ரோமாநஸ்சினுடைய சந்ததிகள் என்று பல எழுத்தாளர்கள் 16ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டுவுள்ளனர்.
1521ஆம் ஆண்டில் எழுதிய மிகப் பழமையான ஆவணக் கடிதமான நீக்சுவின் கடிதத்தில் முதன்முதலாக உருமானியன் என்ற பதத்தைக் காண முடிகிறது.
இரண்டாம் உலகப் போர் வரை “Rumania” அல்லது “Roumania” என்றே பயன்-படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு அதிகாரபூர்வமாக ருமேனியா (Romania) என மாற்றிப் பயன்படுத்துகிறார்கள்.
ருமேனியாவை ஆட்சி செய்த மன்னர்களின் பட்டியல் மிக நீண்ட வரிசையைக் கொண்டது.
அதில் மொல்டோவா மற்றும் வடபல்கேரியாவை மன்னர் புரேபிச்தா ஆண்டதாகவும், கி.மு.87ஆம் ஆண்டில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மாமன்னர் திராஜன் ஆண்டதாகவும், அங்கு தங்கம் மற்றும் வெள்ளி நிறைந்து காணப்பட்ட நிலையில் படையெடுப்புகள் தொடர்ந்தன. குத்தி, ஹன்ஸ், கெபிட், அவர்ஸ் பல்கர்கள், பெசெங்கர்கள் மற்றும் குமனர்கள் போன்றோரும் அங்கு படையெடுத்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு அரச வம்சங்களின் ஆட்சி, அந்நியப் படையெடுப்புகளுக்குப் பிறகு 1940 முதல் கம்யூனிச ஆட்சியும், 1990 முதல் ஜனநாயக ஆட்சியும் நடைபெறுகின்றன.
2007இல் அய்ரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக ஆனது.
ராணுவம்:
முப்படைகளைக் கொண்ட ருமேனிய ராணுவத்திற்கு பாதுகாப்பு அமைச்சரே பொறுப்பாவார். ஆனால் போர்க் காலங்களில் ஜனாதிபதியே ஆயுதப் படையின் உச்ச படைத் தலைவராவார்.
ராணுவப் பாதுகாப்புச் செலவுகள் சுமார் 2.05% ஆகும். இது 2.9. பில்லியன் ஆகும்.
ஆப்கானிஸ்தான் அமைதியைக் காக்கும் நோக்குடன் 2004-ஆம் ஆண்டு முதல் நேடோவில் பங்களித்து வருகிறது.
புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள்:
வருவாய் ஈட்டுவதில் சுற்றுலாத்துறை இரண்டாம் இடம் வகிக்கிறது. வளர்ச்சிக்கு அடித்தளமாகவும் உள்ளது.
சுற்றுலாத் துறை வேலைவாய்ப்பை 5.8% உருவாக்கியுள்ளது.
கோடைக்காலத்தில் சதுரன், வீனஸ், நேப்டுன், ஒளிம்ப், கோன்ச் டண்ட் மற்றும் மாமியா போன்றவை மக்கள் விரும்பிச் செல்கின்ற சுற்றுலாத் தளங்களாகும்.
குளிர்காலத்தில் பனிச்சறுக்கும் இடங்களான வளேய பிரதொவெய் மற்றும் போயானப்ரசொவ் முக்கிய இடமாகும்.
வண்ணம் பூசிய பிரான், திராகிலாவின் கோட்டை தேவாலயம், மரத்தாலான மரமுறேஸ் தேவாலயங்கள் குறிப்பிடத்தக்கவை.
இயற்கையான சுற்றுலாத்தளங்களான தன்யூப் நதியின் முக்கோண வடிநிலம், இரும்புக் கதவுகள், அபுசெளி மலைகளில் உள்ள குகைகள் பயணிகளின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியன.
பொருளாதாரம்:
ருமேனியா ஒரு மேல்-_மத்திய தர பொருளாதார நாடாகும்.
நாணயம் லீயூ என அழைக்கப்படுகிறது.
முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் ஆடைகள், நெசவுப் பொருட்கள், எலெக்டரிகல், எலக்ட்ரானிக் கருவிகள், உலோகப் பொருட்கள், வாகனங்கள், மென்பொருள், மருந்துப் பொருட்கள், ரசாயணப் பொருட்கள் மற்றும் பழங்கள், மலர்கள் ஆகியவை அய்ரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஜெர்மனி மற்றும் இத்தாலி ருமேனியாவின் மிகப் பெரிய வர்த்தக உறவு உள்ள நாடுகளாகும்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெறுவதில் ருமேனியா 49ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.
ருமேனியா வேகமாக வளர்ந்து வரும் நாடாக கணிக்கப்படுகிறது.
விளையாட்டு:
ருமேனியாவின் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு கால்பந்தாட்டமாகும்.
1994ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
கால்பந்தாட்ட வீரர் கேயோர்ஜ் ஹகி, அந்த நாட்டின் மரடோனாவாக புகழப்படுகிறார்.
டென்னிஸ், ரக்பி, பாஸ்கெட் பால், ஹாண்ட் பால், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டுகளில் உலக அளவில் புகழ்பெற்று வருகிறது.
அரசுமுறை:
ருமேனியாவின் அரசியலமைப்பு பிரான்சின் அய்ந்தாவது அரசியலமைப்பை அடிப்படையாய்க் கொண்டது.
பன்மை_கட்சி ஜனநாயக முறையை ஆதாரமாகக் கொண்ட அரசாகும்.
அதிபர் குடியரசு ஆட்சி முறையாகும்.
அதிகாரங்களை குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
குடியரசுத் தலைவர் றிஷீஜீறீணீக்ஷீ க்ஷிஷீமீ என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்; இருமுறை மட்டுமே தேர்தலில் நிற்க அனுமதி உண்டு.
குடியரசுத் தலைவர் பிரதமரை நியமிக்கிறார். பிரதமர் தனது அமைச்சரவையை நியமிக்கிறார்.
அரசு சட்டமியற்றக் கூடிய இடம் நாடாளுமன்றம் ஆகும்.
புவியியல்:
ருமேனியாவின் முக்கிய நதியாக ஸிரத் நதி, ஒல்ட் நதி, முரேஸ் நதி பாய்கிறது.
மத்திய ருமேனியாவில் பதினான்கு மலைச் சிகரங்கள் 2,000 மீட்டருக்கு மேல் உயரமானது.
மிகப் பெரிய மலைச் சிகரம் மொல்டோவேனு சிகரமாகும். (2,544 மீ அல்லது 8.346 அடி)
தென்_மத்திய ருமேனியாவில் கார்ப்பதியன் மலைகள் அழகிய மலைச்சாரல்களைக் கொண்டது.
இயற்கையான காடுகளும் ஆறுகளும் உள்ளதால் கணக்கற்ற தாவர வளம் மற்றும் விலங்குகளின் செழிப்பு தேசமாய் உள்ளது.
கார்ப்பதியன் மலையாடுகள் மிகவும் பிரபலமானவை.
தன்யூப் நதியின் வடிநிலம் பாதுகாக்கப்பட்ட உயிரியல் கோளம்.
போக்குவரத்து:
வர்த்தகத்திற்கு பெரிதும் தரைப்போக்குவரத்து மற்றும் இரயில் போக்குவரத்தை நம்பியுள்ளது.
பூமிக்கு அடியில் ஓடும் ரயில் போக்குவரத்து இங்கு சிறந்து விளங்குகிறது.
கலை:
ருமேனியாவின் சிற்பியான கொன்ஸ்டன்டின் ப்ரன்கசி உலகில் உள்ள சிறந்த சிற்பிகளில் ஒருவர். அவருடைய அந்தரத்தில் ஒரு பறவை உலகம் முழுவதும் புகழப்பட்ட ஒன்று.
இசையில் ஜார்ஜ் எனேஸ்கு உலகம் அறிந்த வயலின் மற்றும் பியானோ இசைஞர்.
எழுத்தாளர்களில் மிர்செ எலியாடே மற்றம் எமில் சிலுரன் உலக அளவில் பிரபலமடைந்தவர்கள்.
கவிஞர் எலயே வீசெல் புகழ்பெற்ற நோபல் பரிசும் பெற்றுள்ளார்.