பிஞ்சு நூல் அறிமுகம்
ஒரு சமூகத்தின் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் முதற்கட்டமாக விளங்குவது குழந்தை வளர்ப்பு தான், குழந்தைகளை தர்க்க ரீதியான சிந்தனைகளோடும், ஆளுமைத் திறனோடும் வளர்ப்பதில் பெற்றோர் முனைப்பு காட்டி வருகின்றனர். அதற்கு உதவும் வகையில் சிறுவர்ப் பாட்டுப் புதையல் என்ற நாற்பது பாடல்களைக் கொண்ட நூல் வெளிவந்துள்ளது. விவசாயத்தைக் காக்கும் மண்புழுக்களை அறிமுகம் செய்யும்போது,
உழாத நிலத்தினிலும்
உழுது பணி செய்திடுமே என்று பாராட்டி,
நிலத்தில் ரசாயனம் விழுந்ததே
எல்லாம் ஒன்றாய் கலந்ததே
மண்புழு வாழ்வை இழந்ததே! என்று நிலைமையைப் புரிய வைக்கிறார் கவிஞர் பிரசன்ன பாரதி.
இயற்கையின் தேவையையும் மக்களின் எதிர்பார்ப்பையும் எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு உவமைகளோடு கவிஞர் பாடுகிறார்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் யாவரும் படிக்கும் விதமாக சமூக சிந்தனையோடு எழுதப்படுள்ள இப்புத்தகம் வாழ்வின் பல்வேறு கோணங்களில் கவனம் பாய்ச்சுகிறது. வாழ்க்கை ஒரு நாளாயினும், மேற்கின் தென்றல், தூரத்து கிராமம், ஒற்றையடிப்பாதை, தவளை, பாலைவனம், வாய்க்கால், ஆடுமேய்க்கும் சிறுவன் என தன் சிந்தனைகளை குழந்தைகள் படிக்கும் வண்ணம் எளிமையான சொற்களோடு கொண்டு வந்திருக்கிறார் பிரசன்ன பாரதி.
நூல்: சிறுவர் பாட்டுப் புதையல்
வெளியீடு: ரிலீப் பவுண்டேஷன்
ஆசிரியர்: சொ.பிரசன்ன பாரதி
– செ. அன்புச்செல்வி