பூ மட்டுமா?
த.மரகதமணி
இது என்ன? எலுமிச்சை பழம்.
இதுக்கு முன்னாடி? எலுமிச்சங்காய்.
இது என்ன? வாழைப்பழம்.
இதுக்கு முன்னாடி? வாழைக்காய்.
இந்த நகைச்சுவை காட்சியை பார்க்காதவர், ரசிக்காதவர் யாருமே இருக்க முடியாது. இது நகைச்சுவை அல்ல. உண்மையாக யோசித்துப் பார்த்தோமானால் நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்குமே அது உணவுப் பொருளானாலும் மற்ற பொருள்களானாலும் பல படிநிலைகளைத் தாண்டித்தான் வருகின்றன. பொதுவாக நாம் பூ என்றோ, மலர் என்றோ குறிப்பிடும் பூக்களின் பல்வேறு படிநிலைகளுக்கு தமிழில் உள்ள சொற்கள் என்னென்ன தெரியுமா?
பூவின் படிநிலைகள்
அரும்பு (தோற்ற நிலை)
மொட்டு (கூம்பு நிலை)
முகை (விரியத் தொடங்குகிறது)
அலர் (மணம் வீசுவது)
மலர் (மலர்ந்த மலர்)
செம்மல் (பூ விழக்கூடிய நிலை)
எல்லா இலைகளையும் இலைகள் என்றா சொல்கிறோம். செடிகள், மரங்களில் உள்ளவை இலைகள். தவிர, பின்வரும் சொற்களை, உரிய இடங்களில் பயன்படுத்த வேண்டும்.
இலை மட்டுமல்ல…
தோகை (கரும்பு, சோளம், கம்பு)
தாள் (நெல், புல்)
ஓலை (தென்னை, பனை)
என்ன பிஞ்சுகளே! எனக்குத் தெரிஞ்சத உங்ககிட்ட பகிர்ந்துகிட்டதை, நீங்க தெரிஞ்சுகிட்டதை உங்க நண்பர் கிட்ட சொல்றீங்களா?
தமிழின் வளப்பமான சொற்களஞ்சியத்தில் இப்படி ஏராளம் உண்டு.
கணிதப் புதிர் சுடோகு