ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!

பயனாய் வாழ்வைக் கழித்திடு – தம்பி
பயத்தைப் போக்கி வளர்ந்திடு
நயமாய்ப் பேசக் கற்றிடு – தம்பி
நன்மைகள் செய்ய எண்ணிடு!
காலம் போற்றி வாழ்ந்திடு – தம்பி
கனிவுடன் நாளும் திகழ்ந்திடு
ஞாலம் போற்ற உயர்ந்திடு – தம்பி
ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!
அன்பைத் தூவி விதைத்திடு – தம்பி
அறிவைப் பெற்று மகிழ்ந்திடு
பண்பை வளர்த்துக் கொண்டிடு – தம்பி
பாரை உயர்த்தத் துடித்திடு!
தங்க.சங்கரபாண்டியன்